சட்டப்பேரவை கூட்டம் விரைவில் தொடங்க உள்ள நிலையில், சட்டப்பேரவை கூட்டத்தில் உரையாற்ற ஆளுநருக்கு முறைப்படி அழைப்பு விடுக்கவே முதலமைச்சர் இன்று ஆளுநரை சந்திக்க சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆளுநரை சந்திக்க சென்றுள்ள முதல்வருடன் அமைச்சர் துரைமுருகன், தலைமைச் செயலாளர், உதவி அலுவலர்கள் சென்றுள்ளனர். கிண்டி ராஜ்பவனில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஆளுநரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்.
ஆளுநர் உரையில் இடம்பெறக்கூடிய முக்கிய அம்சங்கள் குறித்தும் இந்த சந்திப்பின்போது ஆலோசிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆளுநர் உரையுடன் சட்டப்பேரவை கூட்டத்தொடர் இம்மாத இறுதியில் தொடங்கும் என கூறப்படுகிறது. அதற்கேற்றார்போல கலைவாணர் அரங்கத்தில் அதற்கான வேலைகளும் நடந்து கொண்டு வருகிறது.
முதல்வர், ஆளுநருடன் சந்திப்பிற்கு பிறகு தமிழக சட்டப்பேரவை எப்போது கூடுகிறது என்பது குறித்து அறிவிப்பு வெளியாகும் என கூறப்பட்ட நிலையில், ஆளுநர் உரையுடன் சட்டப்பேரவை தொடங்கும் தேதியை சபாநாயகர் அப்பாவு மாலை 6:30 மணிக்கு அறிவிக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது.
கராச்சி : சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று கராச்சி தேசிய மைதானத்தில் நடைபெறும் போட்டியில் இங்கிலாந்து அணியும், தென்னாப்பிரிக்கா அணியும்…
சென்னை : பூமத்திய ரேகையை ஒட்டிய கிழக்கு இந்தியப்பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடலில் இருந்து மாலத்தீவு வரை…
நாகர்கர்னூல் : தெலுங்கானா மாநிலம் நாகர்கர்னூல் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீசைலம் இடது கரை கால்வாய் (SLBC) சுரங்கப்பாதையில் கடந்த சனிக்கிழமை…
கராச்சி : 2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தானில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் குரூப் பி-யில் இங்கிலாந்து,…
சென்னை : இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது 72வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு பிரதமர் மோடி, ஆளுநர்…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 72வது பிறந்தநாள் விழாவானது நேற்று சென்னை தரமணியில் உள்ள YMCA மைதானத்தில் நடைபெற்றது.…