பள்ளி, கல்லூரிகள் திறப்பது எப்போது ? ரமேஷ் போக்ரியால் விளக்கம்.!
கல்வி நிலையங்கள் திறப்பு குறித்து எந்தவிதமான இறுதிக்கட்ட முடிவும் எடுக்கப்படவில்லை மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.
உலகம் முழுவதையும் கொரோனா வைரஸ் ஆட்டி படைத்தது கொண்டிருக்கிறது. இந்நிலையில், 5 ஆம் கட்ட ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இந்நிலையில், பள்ளி கல்வி நிலையங்கள் திறப்பது குறித்து மத்திய மனிதவள அமைச்சர் ரமேஷ் பதில் அறிவித்துள்ளார்.
கல்வி நிலையங்கள் திறப்பு குறித்து எந்தவிதமான இறுதிக்கட்ட முடிவும் எடுக்கப்படவில்லை என்றும் ஆகஸ்ட் மாதத்திற்கு பிறகு பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிலையங்களை திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார். முதலில் தேர்வுகளை வெற்றிகரமாக நடத்தி முடிப்பதை முதல் பணி என்று தெரிவித்துள்ளார். மேலும், பள்ளிகள் திறந்தாலும் சமூக இடைவெளியுடன் எவ்வாறு பள்ளிகளை நடத்துவது என்பது தொடர்பாக ஆய்வு நடைபெறுகிறது எனதெரிவித்துள்ளார்.