திரையரங்குகள் திறப்பு எப்போது ? – செப்டம்பர் 1ல் ஆலோசனை.!

Default Image

திரையரங்குகள் எப்போது திறக்கலாம் என மத்திய அரசு செப்டம்பர் 1-ஆம் தேதி ஆலோசனை மேற்கொள்கிறது.

கொரோனா வைரஸ் தீவிரம் காரணமாக சுமார் 150 நாட்களுக்கு மேலாக தொடர்ந்து திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன. இதன் விளைவாக சில படங்கள் OTT தளத்தில் வெளியிட்டு வருகின்றன. இதனால் திரையரங்கு உரிமையாளர்களுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், திரையரங்குகள் எப்போது திறக்கலாம் என மத்திய அரசு செப்டம்பர் 1-ஆம் தேதி ஆலோசனை மேற்கொள்கிறது என்று அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார். ஆலோசனையில் மத்திய அரசு என்ன வழிகாட்டுதல் சொல்கிறதோ அதன்படி, தமிழகத்தில் தியேட்டர்கள் திறக்கப்படும் என்று தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே எட்டயபுரத்தில் அமைச்சர் கடம்பூர் ராஜு பேட்டியளித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

ind vs pak war Donald Trump
ind vs pak war
IndiaPakistanWarUpdates
Donald Trump
Indian Army
ilaiyaraaja - india pakistan war