முதலமைச்சருடன் ஒப்பிட்டால் எடப்பாடி பழனிசாமி 50% கூட அனுபவம் இல்லாதவர் என அமைச்சர் எ.வ.வேலு செய்தியாளர்கள் மத்தியில் பேசியுள்ளார்.
பொதுப்பணித்துறை அமைச்சர் ஏ.வ.வேலு நேற்று திமுக பொதுக்கூட்டத்தில் பேசுகையில், காவி உடை அணிந்தவர்கள் திமுகவின் எதிரிகள் அல்ல. மக்களுக்கு நல்லது செய்ததால் அவர்களும் எங்களுக்கு அவர்கள் நண்பர்கள் தான் எனவும், மதுரை உயர்நீதிமன்ற கிளை கலைஞர் போட்ட பிச்சை என பேசியிலிருந்தார். அமைச்சரின் இந்த கருத்துக்கள் தமிழக அரசியலில் பேசுபொருளாக மாறியது.
இது குறித்து இன்று அமைச்சர் ஏ.வ.வேலு செய்தியாளர்கள் மத்தியில் விளக்கம் அளித்தார். நான் கூறிய ஒரு வார்த்தை பேசுபொருளாகி விட்டது அதற்கு வருத்தம் தெரிவித்து கொள்கிறேன் என கூறினார் . அடுத்து, தமிழக முதல்வர் உடன் ஒப்பிடும் பொது எடப்பாடி பழனிசாமிக்கு 50 சதவீதம் கூட அரசியல் அனுபவம் இருக்காது என விமர்சித்தார். முதல்வர் மு.க.ஸ்டாலின், எம்எல்ஏவாக , சென்னை மேயகராக , சிறப்பாக செயல்பட்டவர்.கே கலைஞர் ஆட்சி காலத்தில் துணை முதல்வராக இருந்தவர். கலைஞர் ஆட்சி காலத்தில் பல்வேறு பாலங்கள் கட்டப்பட்டது. இபிஎஸ் சொல்லும் குற்றசாட்டு உண்மயானது அல்ல. எதோ போகிற போக்கில் எதையோ சொல்கிறார் என விமர்சித்தார்.
மேலும், திராவிடம் என்பது ஆன்மீகத்திற்கு எதிரானது போல காட்சி படுத்தப்படுகிறது. திமுக ஆட்சியில் தான் அதிகமாக குடமுழுக்கு நடைபெற்றது. பாழடைந்த கோவில்கள் கூட தற்போது அமைச்சர் சேகர்பாபு மேற்பார்வையில் பழுதுபார்க்கப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது. திராவிடத்தையும் ஆன்மீகத்தையும் பிரித்து பார்க்க முடியாது. கோவில்களுக்கு என்ன செய்ய வேண்டுமோ அதனை தமிழக முதல்வர் கட்டாயம் செய்வார்.
டெல்லி : எய்ம்ஸ் மருத்துவமனையில் உடல்நல குறைவு காரணமாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் சிகிச்சை பெற்று வந்த நிலையில்,…
வதோதரா : இந்திய மகளிர் கிரிக்கெட் அணி மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி0 போட்டிகள், 3 ஒரு…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த…
தூத்துக்குடி : சென்னையில் உள்ள அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில்…
சென்னை :முளைக்கட்டிய பச்சைபயிறு முட்டை மசாலா செய்வது எப்படி இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருள்கள்; முளைகட்டிய பச்சைப்பயிறு-…
இலங்கை : தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததால் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர், மீனவர்கள் தடை செய்யப்பட்ட வலைகளை…