பள்ளிகளை திறக்கலாமா… ? வேண்டாமா.? என்று இன்று கருத்துக் கேட்பு கூட்டம் தொடங்கியுள்ளது.
தமிழகத்தில் நவம்பர் 30 -ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. நோய்க்கட்டுப்பாடு பகுதிகள் தவிர மற்ற பகுதிகளில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டது.
அதன்படி, தமிழகத்தில் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை பள்ளிகள், அனைத்து கல்லூரிகள், ஆராய்ச்சி நிறுவனங்கள், மற்றும் கல்வி நிறுவனங்கள், பள்ளி மற்றும் கல்லூரி பணியாளர்கள் விடுதிகள் உட்பட அனைத்து விடுதிகளும் வரும் 16-ஆம் தேதி முதல் செயல்பட அனுமதி அளித்தது தமிழக அரசு. ஆனால், பள்ளிகள் திறப்பதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.குறிப்பாக கொரோனா இரண்டாவது அலை பரவ வாய்ப்பு உள்ளது என்றும் நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்தது வருகின்றனர்.
இதனிடையே பள்ளிகளை திறக்கலாமா… ? வேண்டாமா.? என்று இன்று கருத்துக் கேட்பு கூட்டம் தொடங்கியுள்ளது. விண்ணப்ப படிவங்கள் மூலமாக பெற்றோர்களிடம் கருத்துக் கேட்பு நடைபெற்று வருகிறது. இந்த கருத்து கேட்பில், பெற்றோர்கள் மட்டுமே பங்கேற்க வேண்டும் என்றும் பெற்றோர் இல்லாத நிலையில், காப்பாளர் அல்லது உறவினர்கள் பங்கேற்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
சென்னை : இன்று செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற சொல் தமிழா சொல் எனும்…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவை நிகழ்வில் கலந்து கொள்ள வந்த அதிமுக எம்எல்ஏக்கள், ‘ யார் அந்த தியாகி?’…
சென்னை : பாஜக மாநிலத் தலைவர் பொறுப்பில் உள்ள அண்ணாமலை இன்னும் ஒருசில தினங்களில் மாற்றப்படுகிறார். அவருக்கு பதிலாக புதிய…
சென்னை : வீட்டில் சமையலுக்கு பயன்படுத்தும் எரிவாயு (கியாஸ்) சிலிண்டரின் விலையை மத்திய அரசு ரூ.50 உயர்த்தியுள்ளது. அதாவது, இதுவரை…
மும்பை : இன்று நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மும்பை வான்கடே…
டெல்லி : மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை உயர்த்தியுள்ளது என்ற செய்தி தலைப்பு செய்தியாக…