புயல் எப்போது..எங்கு கரையைக் கடக்கும்? விளக்கமித்த தென்மண்டலத் தலைவர் பாலச்சந்திரன்.
புயல் கரையை கடக்கும் பொழுது 90.கி.மீ.வேகத்தில் காற்று வீசக் கூடும் என தென்மண்டலத் தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

சென்னை : வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் தமிழகம் நோக்கி நகர்ந்து வருகிறது. இது புயலாக மாற வாய்ப்புள்ளதாக நேற்று தெரிவிக்கப்பட்ட நிலையில் அதன்பிறகு வலுவான புயலாக மாற வாய்ப்பில்லை என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
அதனைத் தொடர்ந்து இன்று மீண்டும் காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் தீவிரம் காரணமாக புயலாக மாறக்கூடும் என கூறி இருந்தனர். இதற்கு மேலும் விளக்கமளித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டலத் தலைவர் பாலச்சந்திரன்.
அந்த வீடியோவில் அவர் கூறியதாவது, “தென்மேற்கு வங்க கடல் பகுதியில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்து ஒரு சில மணி நேரங்களில் புயலாக வலுப்பெறக்கூடும். இது தொடர்ந்து வடமிருக்கு திசையில் நகர்ந்து நாளை பிற்பகல் காரைக்கால் மகாபலிபுரம் இடையே புதுவைக்கு அருகில் கரையைக் கடக்கக்கூடும்.
இதன் காரணமாக வடதமிழக கடலோர மாவட்டங்களில் பரவலானது முதல் மிதமான மழையும், ஒரு சில இடங்களில் கனமுதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதிக கனமழையும் பெய்யக்கூடும். மேலும், இந்த புயல் கரையை கடக்கின்ற பொழுது பலத்த காற்று வீசக்கூடும் மணிக்கு எழுவது முதல் 80க்கு கிலோமீட்டர் வேகத்தில், அவ்வப்போது 90 கிலோ மீட்டர் வேகத்தில் வீசப்படும் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்துகிறோம்”, என பாலச்சந்தரன் தெரிவித்துள்ளார்.
— Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) November 29, 2024
லேட்டஸ்ட் செய்திகள்
இன்னும் 15 நாள் தான்., சேட்டிலைட் வழியாக சுங்கக்கட்டணம் வசூல்! மத்திய அமைச்சர் அறிவிப்பு!
April 16, 2025
இறுதி வரை திக் திக் ஆட்டம்… பஞ்சாப் த்ரில் வெற்றி.., கொல்கத்தாவை மிரள வைத்த சாஹல் – மார்கோ.!
April 15, 2025
வசூலில் சக்கை போடு… ரூ.100 கோடி கிளப்பில் இணைந்த GBU.!
April 15, 2025
சோனியா காந்தி, ராகுல் காந்தி மீது குற்றப்பத்திரிகை தாக்கல்.!
April 15, 2025