அதிமுக கருப்பு சட்டை அணிந்து வந்த போது கோபம் இல்லை சிரிப்புதான் வந்தது – மு.க.ஸ்டாலின்!

அதிமுக கருப்பு சட்டை அணிந்து வந்த போது எனக்கு கோபம் இல்லை சிரிப்புதான் வந்தது என மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.

edappadi palanisamy and mk stalin

சென்னை : சட்டப்பேரவை கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் பதிலுரையாற்றி வருகிறார். அப்போது சட்டப்பேரவைக்கு கருப்பு உடை அணிந்து கொண்டு வருகை தந்த அதிமுக குறித்து பேசியதோடு அவர்களை நோக்கி தன்னுடைய கேள்விகளையும் ஆதங்கத்தோடு எழுப்பினார்.

இது குறித்து பேசிய அவர் ” எதிர்கட்சியான அதிமுக சார்பில் கருப்பு உடை அணிந்து வந்த போது எனக்கு உண்மையில் கோபம் வரவில்லை. சிரிப்புதான் வந்தது. அதனை பார்த்துவிட்டு இப்படியாவது கருப்பு சட்டை போடுகிறார்களே என்று மகிழ்ச்சி அடைந்தேன். கருப்பு சட்டை அணிந்து வருவது என்பது உங்களது தனிப்பட்ட உரிமை தான். ஆனால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மாநில சட்டமன்றத்தை ஏன் அவமதிப்பு செய்கிறீர்கள்?

ஈவு, இரக்கமில்லாமல் மாநில அரசுக்கு வரவேண்டிய தொகை மத்திய அரசு தடுத்து வைத்திருக்கிறது. பேரிடர் நிதியை கூட தராமல் உள்ள ஒன்றிய அரசை கண்டித்து நீங்கள் கருப்பு சட்டை அணிந்து இருந்தால் உங்களை நான் பாராட்டி இருப்பேன். ஆளுநரைக் கண்டித்து கருப்பு சட்டை அணியும் துணிச்சல் உங்களுக்கு ஏன் இல்லை? இருட்டு அரசியல் செய்பவர்களுக்கு கருப்பு சட்டை அணிய தார்மீக உரிமை இல்லை.

விடியல் எங்கே என எதிர்க்கட்சிகள் கேட்கிறார்கள். விடியல் தரப்போகிறோம் என சொன்னது மக்களுக்குத்தானே தவிர, மக்களுக்கு எதிரானவர்களுக்கு அல்ல. விடியலை பார்த்தால் அவர்களுக்கு கண்கள் கூசத்தான் செய்யும்” எனவும் மு.க.ஸ்டாலின் பேசினார்.

அதனைத்தொடர்ந்து ஆளுநர் குறித்து பேசிய மு.க.ஸ்டாலின் ” 2022-ஆம் ஆண்டு இப்போது இருக்கும் ஆளுநர் தனது உரையை முழுமையாக வாசித்தார், எதையும் மாற்றவில்லை. ஆனால் இந்த 3 ஆண்டு காலமாக அபத்தமான காரணங்களை கூறி உரை படிப்பதை தவிர்த்தார் என அவையில் உள்ள அனைவருக்கும் தெரியும்.

சட்டமன்றத்தின் மாண்பையும் மதிக்காமல், மக்களின் எண்ணங்களுக்கும் மதிப்பளிக்காமல் தமிழ்த் தாய் வாழ்த்தை அவமானப்படுத்த துணிந்ததின் மூலமாக அவர் வகிக்கும் பதவிக்கு இழுக்கு ஏற்படும் காரியத்தை ஆளுநர் செய்துவருவது, இந்த பேரவை இதுவரை காணாத ஒன்று.. இனியும் காணக் கூடாது.  தமிழ்நாடு வளர்ந்துவருவதை அவரால் ஜீரனிக்க முடியவில்லை என நினைக்கிறேன்” எனவும் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

sivasankar dmk tvk vijay
pm modi and mk stalin
tvk vijay about dmk
edappadi palanisamy and mk stalin
mk stalin
smriti mandhana records