சேலத்தில் திமுக இளைஞரணி மாநாடு வெற்றிகரமாக நடைபெற்றதற்கு நன்றி தெரிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் “சேலத்தில் நடைபெற்ற இளைஞர் பட்டாளத்தின் எழுச்சி மாநாடு வெற்றி பெற்றது. சமூக நீதிக்கொள்கை வழியில் பயணிக்கும் மத நல்லிணைக்க மண்தான் தமிழ்நாடு என்பதை சேலம் மாநாடு உணர்த்தியுள்ளது. காமாலைக் கண்களுக்கு கண்டதெல்லாம் மஞ்சள் என்பார்கள், இந்த நிலைதான் ஆளுநர் ஆர்.என் ரவி இருக்கிறார். தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை கொஞ்சமும் அறியாமல் ஆளுநர் பொறுப்பில் இருந்து செயல்படுகிறார்.
தமிழ்நாட்டின் உண்மையான பக்தர்கள் பெருமானையும் வழிபடுவர், பெரியாரின் தத்துவங்களையும் போற்றுவார்கள், தமிழ்நாட்டில் உண்மையான பக்தர்கள் பிற மதத்தினரையும் மதித்து நடப்பார்கள். பாஜகவில் உயர்ந்த பதவியில் உள்ளவர்கள் வதந்தி பரப்பும் வாட்ஸ் ஆப் யூனிவர்சிட்டிகளாக உள்ளனர்.
போலீசை கைக்குள் வைத்துக்கொண்டு அராஜகம்… நிர்மலா சீதாராமன் கடும் கண்டனம்.!
வதந்தியை பரப்பி அதை உண்மை போல் ஆக்கும் தனியே பாஜகவில் உயர்ந்த பொறுப்பில் உள்ளவர்களே செய்கின்றனர் பாஜகவின் உயர்ந்த பொறுப்பில் உள்ளவர்கள் அரசியல் சட்டத்தை மதிக்காத போக்குடன் செயல்படுகின்றனர் மேற்கு மாம்பலத்தில் உள்ள கோத்தாண்டராமர் தொடர்பான ஆளுநரின் கருத்து அவரது வன்மத்தை வெளிப்படுத்துகிறது. ஒரு வதந்தியை வாட்ஸ் ஆப் வலைதளத்தில் பரவ செய்து அதை உண்மை போல ஆகும் பணியை பாஜக செய்து வருகிறது. எந்த அச்சுறுத்தலும் இல்லை என்று, அர்ச்சகர்களே தெரிவித்துள்ள நிலையில் ஆளுநர் அலறுவதற்கு காரணம் அரசியலே
அயோத்தி அரசியலை, கோதண்ட ராமர் கோயிலில் ஆளுநர் தேடியிருக்கிறார் என்றால் அவரிடம் இருப்பது பக்தியா, பகல் வேடமா என்று முதலமைச்சர் மு க ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார். பாஜகவில் உயர்ந்த பொறுப்பில் உள்ளவர்களே பொறுப்பின்றி வதந்தியை பரப்புவது வழக்கமான ஒன்றாகிவிட்டது. வதந்தியை பரவச் செய்வதில் தலைநகரில் டெல்லி முதல் தமிழ்நாடு பாஜகவினர் வரை யாரும் விதிவிலக்கு அல்ல, திமுக இளைஞரணி மாநாட்டை வெற்றியை கண்டு அலரும் அரசியல் எதிரிகள் வதந்திகளை பரப்பிய திசை திருப்ப நினைக்கின்றனர்.
வதந்திகளை பரப்பி எதிரிகள் திசை திருப்ப நினைத்தாலும் திமுகவினர் இலக்கை மட்டுமே குறி வைத்து செயல்பட வேண்டும். மாநாட்டில் திரண்ட பெரும் இளைஞர்கள் பட்டாளம், திமுகவின் எதிர்காலம் குறித்த நம்பிக்கையை விதைத்துள்ளது. சிறுபான்மையினர் மட்டுமின்றி இந்து மதத்தில் உள்ள ஓபிசி, எஸ்சி, எஸ்டி மக்களுக்கும் பாஜக அரசு துரோகம் இழைக்கிறது. மத்திய நிதியமைச்சர் திட்டமிடப்பட்ட வதந்தி பொழுது விடிவதற்குள் பொய் என அம்பலமானது. பொய் பரப்பரைக்கு உயர்நீதிமன்றமே கண்டனம் தெரிவித்துள்ளது” என தெரிவித்துள்ளார்.
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…