பாஜகவினர் வதந்தி பரப்பும் வாட்ஸ்அப் யுனிவர்சிட்டிகள் – முதல்வர்..!

mk stalin

சேலத்தில் திமுக இளைஞரணி மாநாடு வெற்றிகரமாக நடைபெற்றதற்கு நன்றி தெரிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் “சேலத்தில் நடைபெற்ற இளைஞர் பட்டாளத்தின் எழுச்சி மாநாடு வெற்றி பெற்றது.  சமூக நீதிக்கொள்கை வழியில் பயணிக்கும் மத நல்லிணைக்க மண்தான் தமிழ்நாடு என்பதை சேலம் மாநாடு உணர்த்தியுள்ளது. காமாலைக் கண்களுக்கு கண்டதெல்லாம் மஞ்சள் என்பார்கள், இந்த நிலைதான் ஆளுநர் ஆர்.என் ரவி இருக்கிறார். தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை கொஞ்சமும் அறியாமல் ஆளுநர் பொறுப்பில் இருந்து செயல்படுகிறார்.

தமிழ்நாட்டின் உண்மையான பக்தர்கள் பெருமானையும் வழிபடுவர், பெரியாரின் தத்துவங்களையும் போற்றுவார்கள், தமிழ்நாட்டில் உண்மையான பக்தர்கள் பிற மதத்தினரையும் மதித்து நடப்பார்கள். பாஜகவில் உயர்ந்த பதவியில்  உள்ளவர்கள்  வதந்தி பரப்பும் வாட்ஸ் ஆப் யூனிவர்சிட்டிகளாக  உள்ளனர்.

போலீசை கைக்குள் வைத்துக்கொண்டு அராஜகம்… நிர்மலா சீதாராமன் கடும் கண்டனம்.!

வதந்தியை பரப்பி அதை உண்மை போல் ஆக்கும் தனியே பாஜகவில் உயர்ந்த பொறுப்பில் உள்ளவர்களே செய்கின்றனர் பாஜகவின் உயர்ந்த பொறுப்பில் உள்ளவர்கள் அரசியல் சட்டத்தை மதிக்காத போக்குடன் செயல்படுகின்றனர்  மேற்கு மாம்பலத்தில் உள்ள கோத்தாண்டராமர் தொடர்பான ஆளுநரின் கருத்து அவரது வன்மத்தை வெளிப்படுத்துகிறது. ஒரு வதந்தியை வாட்ஸ் ஆப் வலைதளத்தில் பரவ செய்து அதை உண்மை போல ஆகும் பணியை பாஜக செய்து வருகிறது. எந்த அச்சுறுத்தலும் இல்லை என்று, அர்ச்சகர்களே தெரிவித்துள்ள நிலையில் ஆளுநர் அலறுவதற்கு காரணம் அரசியலே

அயோத்தி அரசியலை, கோதண்ட ராமர் கோயிலில் ஆளுநர் தேடியிருக்கிறார் என்றால் அவரிடம் இருப்பது பக்தியா, பகல் வேடமா என்று முதலமைச்சர் மு க ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார். பாஜகவில் உயர்ந்த பொறுப்பில் உள்ளவர்களே பொறுப்பின்றி வதந்தியை பரப்புவது வழக்கமான ஒன்றாகிவிட்டது. வதந்தியை பரவச் செய்வதில் தலைநகரில் டெல்லி முதல் தமிழ்நாடு பாஜகவினர் வரை யாரும் விதிவிலக்கு அல்ல, திமுக இளைஞரணி மாநாட்டை வெற்றியை கண்டு அலரும் அரசியல் எதிரிகள் வதந்திகளை பரப்பிய திசை திருப்ப நினைக்கின்றனர்.

வதந்திகளை பரப்பி எதிரிகள் திசை திருப்ப நினைத்தாலும் திமுகவினர் இலக்கை மட்டுமே குறி வைத்து செயல்பட வேண்டும். மாநாட்டில் திரண்ட பெரும் இளைஞர்கள் பட்டாளம், திமுகவின் எதிர்காலம் குறித்த நம்பிக்கையை விதைத்துள்ளது.  சிறுபான்மையினர் மட்டுமின்றி இந்து மதத்தில் உள்ள ஓபிசி, எஸ்சி, எஸ்டி மக்களுக்கும் பாஜக அரசு துரோகம் இழைக்கிறது.  மத்திய நிதியமைச்சர் திட்டமிடப்பட்ட வதந்தி பொழுது விடிவதற்குள் பொய் என அம்பலமானது. பொய் பரப்பரைக்கு உயர்நீதிமன்றமே கண்டனம் தெரிவித்துள்ளது” என தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

IPL 2025 KKR vs srh
KKR vs SRH - IPL 2025 1st innings
Opposition leader Rahul Gandhi
CM MK Stalin speech CPIM Conference
TVK Leader Vijay
Watermelon - sathish kumar