முழு ஒத்துழைப்பு வாட்ஸ்அப் நிறுவனம் கொடுப்பதில்லை – தமிழக அரசு..!
சைபர் குற்றங்களை தடுக்க சமூக வலைதள கணக்குகளை ஆதார் எண்களை கட்டாயமாக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆண்டனி கிளமெண்ட் ரூபின் என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் முகநூல் , வாட்ஸ் அப்பிற்கு ஆதார் எண்ணை கட்டாயமாக்க வழக்கை உயர் நீதிமன்றம் விசாரிக்கலாம் ஆனால் அதற்கான இறுதி தீர்ப்பை வழங்க கூடாது என கூறியிருந்தது.
இந்நிலையில் நேற்று இந்த வழக்கு நீதிபதி சத்யநாராயணன் மற்றும் சேஷசாயி அமருக்கு வந்தது.அப்போது மக்கள் கருத்துக்களை பகிர ஒரு தளத்தை அமைத்து விட்டு அதில் பரப்பப்படும் தவறான செய்திகளுக்கு பொறுப்பேற்க முடியாது என வாட்ஸ்அப் நிறுவனம் கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என நீதிபதிகள் கூறினர்.
வாட்ஸ் அப்பிற்கு ஒரு சட்டம் இருந்தாலும் , இந்தியாவின் சட்டத்தை பின்பற்ற வேண்டும் தவறான தகவல்கள் பரவுவதால் சில பாதிப்பு ஏற்படுகிறது. கட்சி ஊடகங்களை கண்காணிக்கவும் , கட்டுப்படுத்தும் அமைப்பு உள்ளது போல சமூக வலைதளங்களை கட்டுப்படுத்த அமைப்பு இருக்கிறதா என நீதிபதிகள் கேள்விகள் எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த மத்திய அரசு வழக்கறிஞர் கண்காணிக்கவும் தவறான தகவலை கண்டுபிடிக்கவும் மத்திய அரசு புதிய சட்டத்தை இயற்ற உள்ளதாகவும் கூறினார். ட்விட்டர் மற்றும் பேஸ்புக் நிறுவனம் அரசுக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்கிறது. அதேபோல வாட்ஸ்அப் நிறுவனம் ஒத்துழைப்பு வழங்குவதில்லை என தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் இந்த வழக்கை அக்டோபர் 10-ம் தேதி ஒத்தி வைத்தனர்.