எந்த தேர்வானாலும் முறைகேடு என்பது இல்லாத நிலை உருவாக்கப்படும் – அமைச்சர் ஜெயக்குமார்

Default Image
  • எந்த தேர்வானாலும் முறைகேடு என்பது இல்லாத நிலை உருவாக்கப்படும் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
  •  மேலும் ஊழலின் மொத்த உருவம் திமுக தான் எனவும் தெரிவித்துள்ளார். 

டிஎன்பிசி  நடத்திய குரூப் 4 தேர்வில் முறைகேடு நடந்தது தொடர்பான விசாரணையில், 99 தேர்வர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். இவர்கள் எப்போதுமே டிஎன்பிஎஸ்சி தேர்வை எழுது முடியாத வகையில் வாழ்நாள் தடையும் விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், அரசு தேர்வுகளுக்கான இடைத்தரகர்கள் உள்ளிட்ட கருப்பு ஆடுகள் விரைவில் களையப்பட்டு, எந்த தேர்வானாலும் முறைகேடு என்பது இல்லாத நிலை உருவாக்கப்படும்.

டி.என்.பி.எஸ்.சி முறைகேட்டில் குற்றம் செய்தவர்கள் யாராக இருப்பினும் அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், அரசுத் தேர்வுகளில் முறைகேடு நடப்பதாக யார் புகார் தெரிவித்தாலும் உடனடி விசாரணை நடத்தப்பட்டு, தவறு நடந்திருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும், ஊழலின் மொத்த உருவம் திமுக தான்.தமிழர்களின் தன்மானத்தை கெடுத்தவர்கள் திமுக. முதல்வரை குறைகூற அவர்களுக்கு அருகதை இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்