“எது நடக்கவிருக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும் ” – ஒபிஎஸ் சூசக ட்வீட் காரணம் என்ன ?

“எது நடக்கவிருக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும் ” என்று துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் ட்வீட் செய்துள்ளார்.
வருகின்ற 2021 -ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதையடுத்து தமிழக அரசியல் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது .இதனால் அரசியல் கட்சித்தலைவர்கள் தங்கள் தேர்தல் பிரச்சார வியூகத்தை அமைக்கத் தொடங்கிவிட்டனர் .இதில் அதிமுகவின் யார் அடுத்த முதல்வர் வேட்பாளர் என்ற அனல் காற்று வீசத்தொடங்கிவிட்டது .இதன் வெளிப்பாடாக அதிமுகவின் செயற்குழு கூட்டம் கடந்த மாதம் 28-ஆம் தேதி நடைபெற்றது.
அதில் அதிமுக முதல்வர் வேட்பாளர் குறித்து முடிவெடுக்க செயற்குழுவில் அமைச்சர்கள், மூத்த தலைவர்கள் சிலர் வலியுறுத்தியதாகவும் தகவல் வெளியாகின.இதனிடையே அ.தி.மு.க. கட்சியையும், ஆட்சியையும் வழிநடத்த 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழுவை அமைக்க வேண்டும் என்று அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.
இதற்கிடையே வருகிற 7-ஆம் தேதி முதல்-அமைச்சர் வேட்பாளர் அறிவிக்கப்பட உள்ளதாக சமீபத்தில் நடந்த அ.தி.மு.க. செயற்குழுவில் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி அறிவித்திருந்தார். இதைத்தொடர்ந்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் தனித்தனியாக சந்தித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே வருகிற 6-ஆம் தேதி (நாளை) அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் சென்னைக்கு வர வேண்டும் என்று அதிமுகவின் ட்விட்டர் பக்கத்தில் வெளியானது, பின்பு அது திடீரென அகற்றப்பட்டது. இதனால் திட்டமிட்டபடி 6-ஆம் தேதி எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெறுமா ? என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்நிலையில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில் ,தமிழக மக்கள் மற்றும் அஇஅதிமுக கழகத் தொண்டர்களின் நலனை கருத்தில் கொண்டே எனது முடிவுகள் இதுவரை இருந்துள்ளன. இனியும் அவ்வாறே இருக்கும். எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது! எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது!! எது நடக்கவிருக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும் என்று பதிவிட்டுள்ளார் .
தமிழக மக்கள் மற்றும் அஇஅதிமுக கழகத் தொண்டர்களின் நலனை கருத்தில் கொண்டே எனது முடிவுகள் இதுவரை இருந்துள்ளன. இனியும் அவ்வாறே இருக்கும்.
எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது!
எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது!!
எது நடக்கவிருக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும்!!
— O Panneerselvam (@OfficeOfOPS) October 5, 2020
லேட்டஸ்ட் செய்திகள்
குஜராத்தை கதறவிட்ட 14 வயது சிறுவன்…ராஜஸ்தான் த்ரில் வெற்றி!
April 28, 2025