யார் என்ன செய்தாலும் பிரதமராகிய நான் ஏழைகளின் பக்கம்தான் இருப்பேன் -பிரதமர் நரேந்திர மோடி

Published by
Venu

யார் என்ன செய்தாலும் பிரதமராகிய நான் ஏழைகளின் பக்கம்தான் இருப்பேன் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக  மதுரை பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசுகையில், தேசிய நெடுஞ்சாலை, நீர்வழிச்சாலை, வானூர்தி சேவை, தகவல் தொடர்பு மேம்பாட்டிற்கு அரசு முக்கியத்துவம் அளிக்கிறது.வானூர்தி மற்றும் பாதுகாப்பு தளவாட உற்பத்தியின் மையமாக தமிழகம் திகழ நடவடிக்கை எடுக்கப்படும்.நலிந்த பொதுப்பிரிவினருக்கான 10% இடஒதுக்கீடு, பட்டியலினத்தவர், பிற்படுத்தப்பட்டோரை பாதிக்காது.10% இடஒதுக்கீடு விவகாரத்தில் சில தமிழக கட்சிகள் எதிர்மறையாக பேசி வருகின்றன. தவறாக சித்தரிக்க முயல்கின்றன.

தேவேந்திர குல வேளாளர் சமூகத்தினரின் கோரிக்கை பற்றி அதற்கான ஆணையத்தில் பேசியுள்ளேன். ஏழை மக்களுக்கான திட்டத்தை எதிர்ப்பது நன்மை பயக்காது.

கப்பல் போக்குவரத்தில் முக்கிய துறைமுகமாக தூத்துக்குடி துறைமுகம் மேம்படுத்தப்படுகிறது.தூத்துக்குடி துறைமுகத்தின் முன்னேற்றத்திற்கு பல்வேறு பணிகளை மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

ஆரோக்கியத்தை மேம்படுத்த தூய்மை இந்தியா திட்டம் மக்களிடம் மிகுந்த வரவேற்பைப்பெற்றுள்ளது. தமிழகத்தில் மட்டுமே 47லட்சம் கழிப்பறைகள் கட்டித் தரப்பட்டுள்ளன. நாட்டின் வளர்ச்சிக்காக உள்கட்டமைப்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.மதுரை மக்களின் கோரிக்கையான அதிவேக ரயில் சேவை விரைவில் தொடங்கப்படும்.யார் என்ன செய்தாலும் பிரதமராகிய நான் ஏழைகளின் பக்கம்தான் இருப்பேன்.

நாட்டில் ஊழல் மற்றும் மோசடி புரிந்தவர்கள் யாராக இருந்தாலும், வெளிநாட்டில் இருந்தாலும் நீதியின் முன் நிறுத்தபடுவர். ஊழல் புரிந்தவர்கள் தான் நாட்டின் காவலனாக உள்ளவரை நீக்க ஒன்று சேர்ந்துள்ளனர்.ஏழைகளுக்கு எதிரான எந்த ஒரு அரசியல் நடவடிக்கையும், யாருக்கும் எந்த பயனையும் தராது என்றும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

Published by
Venu

Recent Posts

ஜார்க்கண்ட் தேர்தல் ரிசல்ட்… வெற்றியை தக்க வைத்துக்கொண்ட ஜே.எம்.எம்., கூட்டணி!

ஜார்க்கண்ட் தேர்தல் ரிசல்ட்… வெற்றியை தக்க வைத்துக்கொண்ட ஜே.எம்.எம்., கூட்டணி!

ஜார்க்கண்ட் : மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டப் பேரவைத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று காலை 8மணி முதலே எண்ணப்பட்டு…

7 hours ago

மேற்கு வங்கம்.. 6 தொகுதிகளில் திரிணாமுல் காங்கிரஸ் வெற்றி.!

மேற்கு வங்கம் : மேற்குவங்கத்தில நடந்த இடைத்தேர்தலில் 6 தொகுதிகளிலும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. முன்னதாக…

8 hours ago

மகாராஷ்டிரா தேர்தல் வெற்றி! “மக்களுக்கு நன்றி”..பிரதமர் மோடி நெகிழ்ச்சி!!

மும்பை : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்டு வந்த  நிலையில்,…

8 hours ago

பீகார் இடைத்தேர்தல் : 4 சட்டமன்ற தொகுதிகளிலும் பாஜக கூட்டணி வெற்றி!

பீகார் : மாநிலத்தில் பெலகஞ்ச், இமாம்கஞ்ச், ராம்கர் மற்றும் தராரி ஆகிய நான்கு தொகுதிகளின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. தராரி…

9 hours ago

“நாடாளுமன்றத்தில் வயநாட்டு மக்களின் குரலாக இருக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்” – பிரியங்கா காந்தி!

கேரளா : கேரளாவின் வயநாடு எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ததை அடுத்து, அங்கு அவரது தங்கை கேரளா…

9 hours ago

“என்ன நண்பா ஹப்பியா”… நிர்வாகிகளுக்கு த.வெ.க தலைவர் விஜய் கொடுத்த நினைவு பரிசு!

சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு பிரமாண்டமாகக் கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம்…

9 hours ago