“யூடியூபர் இர்ஃபான் செய்தது கொலை குற்றமில்லை..” – அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
யூடியூபர் இர்ஃபான் செய்தது கொலை குற்றமில்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை : சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் தனக்குப் குழந்தை பிறந்த போது, தொப்புள் கொடியை வெட்டுவது போன்று வீடியோவை எடுத்து
அண்மையில், சமூக வலைதளத்தில் வெளியிட்டு சர்ச்சையில் சிக்கினார் இர்ஃபான்.
இவ்விவகாரத்தில், இர்பான் மீதும் தனியார் மருத்துவமனை மற்றும் மருத்துவர் நிவேதா மீதும் நடவடிக்கை கோரி, சோமஞ்சேரி காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, யூடியூபர் இர்ஃபானின் மனைவிக்கு பிரசவம் பார்த்த தனியார் மருத்துவமனை மருத்துவர் நிவேதிதாவிற்கு தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் விளக்கம் கேட்டு தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் நோட்டீஸ் அனுப்பியது.
அதன்படி, மகப்பேறு அறைக்குள் வீடியோ கேமராவோடு இர்ஃபானை அனுமதித்ததற்கும், எந்தவித பயிற்சியும் இல்லாதவரிடம் தொப்புள் கொடியை வெட்டுவதற்கு அனுமதித்ததன் காரணம் என்ன? என்பது குறித்து விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
ஆனால், மருத்துவமனை மீது மட்டும் நடவடிக்கை எடுத்துவிட்டு, இர்ஃபான் மீது நடவடிக்கை இல்லாதது ஏன்? கேள்வி எழுப்பப்பட்டு வந்த நிலையில், இது கொலை குற்றமில்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
இர்ஃபான் மனைவியின் பிரசவ வீடியோ சர்ச்சை குறித்து பேசிய அவர், யூடியூபர் இர்ஃபான் செய்தது கொலை குற்றமில்லை. சம்பந்தப்பட்ட மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
மருத்துவமனைக்கு 50,000 அபராதம் விதித்து, 10 நாட்களுக்குத் தமிழக சுகாதாரத் துறை தடை விதிக்கப்பட்டது. மேலும், இர்ஃபானுக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டதாகவும், இதை ஒரு பெரிய விஷயமில்லை என்றும் கூறினார். முன்னதாக, இர்ஃபான் மன்னிப்பு கேட்டாலும் விடமாட்டோம் என அவர் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.