சென்னை:அரசின் அலுவல்களை தன் அறையில் இருந்து நேரடியாக கண்காணிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள மின்னணு தகவல் பலகை (CM dashboard) திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தற்போது தொடங்கி வைத்துள்ளார்.
கடந்த செப்டம்பர் மாதம் அனைத்துத்துறை செயலாளர்களுடன் ஆலோசனை நடத்திய முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள்,அனைத்து துறை சார்ந்த திட்டங்கள்,செயல்பாடுகள் குறித்து நாள்தோறும் தானே நேரடியாக கண்காணிக்க உள்ளதாக தெரிவித்திருந்தார்.
அதன்படி,முதலமைச்சர் அறையில் மின்ணணு பலகை மூலம் அரசின் திட்டங்களின் நிலையை கண்காணிக்கும் திட்டம் இன்று தொடங்கப்படும் என்றும்,மின்னணு தகவல் பலகையில் தேர்தல் வாக்குறுதிகள், வெளியிட்ட அறிவிப்புகள், அறிவிக்கப்பட்ட வாக்குறுதிகள் மீதான நடவடிக்கைகள்,நிதி ஒதுக்கீடு, பணிகளின் முன்னேற்றம் குறித்த தவகல்கள் இடம்பெறும் எனவும் முன்னதாக தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில்,அரசின் அலுவல்களை தன் அறையில் இருந்து நேரடியாக கண்காணிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள மின்னணு தகவல் பலகையை (CM dashboard) திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தற்போது தொடங்கி வைத்துள்ளார்.அதன்படி,தமிழ்நாடு அரசின் அனைத்து துறைகளையும் ஒருங்கிணைக்கும் வகையில் புதிய முயற்சியில் “CM Dashboard” என்ற புதிய திட்டம் இன்று தொடங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு 360 என்ற இந்த திட்டம் மூலம்,அரசின் துறை சார்ந்த தகவல்களை மக்களிடம் நேரடியாக கொண்டு செல்லும் வகையிலும்,ஆட்சி நிர்வாகத்தை அடுத்தக் கட்டத்திற்கு கொண்டு செல்லும் வகையிலும் முதலமைச்சர் தகவல் பலகை உருவாக்கப்பட்டுள்ளது.
அரசின் திட்டங்களின் நிலையை அறிந்து அதற்கான பணிகளை துரிதப்படுத்த மின்னணு தகவல் பலகை உதவும்.42 துறைகளின் செயல்பாடுகளையும் முதல்வர் தனது அறையில் இருந்து தெரிந்து கொள்ளும் வகையில் இந்த தகவல் பலகை உருவாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக,தமிழக அரசால் வெளியிடப்பட்ட அறிவிப்புகள்,பணிகளின் முன்னேற்றம் குறித்த தகவல்களை முதல்வர் தனது அறையிலிருந்து கண்காணிப்பார்.எந்த பகுதிகளில் என்ன பணி நடைபெறுகிறது?,எங்கு தாமதம் ஏற்படுகிறது? என்பதை அறிந்து கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து,ஒவ்வொரு துறை செயலர்களும், அவர்களின் துறை சார்ந்த தகவல்கள் மட்டுமே பார்க்க முடியும் என்றும் தகவல் பலகையை கொண்டு வாரம் ஒருமுறை செயலாளர்களுடன் முதலமைச்சர் ஆய்வு கூட்டம் நடத்துவர் எனவும் கூறப்படுகிறது.
சென்னை : சென்னை அடையாறு முத்தமிழ் பேரவை சிவாஜி நினைவிடம் அருகே, திராவிட இயக்கத் தமிழர் பேரவை நடத்தும் "திராவிடமே…
சென்னை : கடந்த மாதம் 27-ல் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தவெக கட்சியின் முதல் மாநாடு நடைபெற்றது. தவெக வெற்றிக்…
கோவை : முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் திமுக செய்தி தொடர்பாளருமான கோவை செல்வராஜ் (66) மாரடைப்பால் இன்று காலமானார். திருப்பதியில்…
சென்னை : நடிகர் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் 'அமரன்' திரைப்படத்தில் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரிப்பதாக குற்றச்சாட்டை முன்வைத்து எஸ்டிபிஐ கட்சியினர், கோவை,…
ஐரோப்பா : மறைந்த பிரிட்டன் அரசி எலிசபெத் இந்த மண்ணைவிட்டு மறைந்தாலும் அவர் பயன்படுத்திய பொருட்கள் பிரமாண்ட விலைக்கு ஏலத்தில்…
சென்னை : நடிகர் சூர்யாவின் “கங்குவா” படத்தை வெளியிடத் தடையில்லை என ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. ரூ.55 கோடி ரூபாயை வழங்காமல்…