ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீச காரணம் என்ன? – கருக்கா வினோத் வாக்குமூலம்!

karukka vinoth

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீச காரணம் என்ன? என்று போலீஸ் காவலில் கருக்கா வினோத் அளித்த வாக்குமூலத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த வாரம் சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை முதல் வாசல் முன்பு இருக்கும் பேரிகேட் (தடுப்பு) அருகில் மிகுந்த பாதுகாப்பு இருந்து கருக்கா வினோத் எனும் நபர் பெட்ரோல் குண்டு வீசி பரபரப்பை ஏற்படுத்தினார்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர், உடனடியாக குற்றவாளியை கைது செய்து அவரிடமிருந்து மேலும் இரண்டு பெட்ரோல் நிரப்பிய பாட்டில்களை கைப்பற்றினர்.பெட்ரோல் குண்டு வீசி தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள கருக்கா வினோத் சென்னை தேனாம்பேட்டையை சேர்ந்தவர். இவர் பெட்ரோல் குண்டு வீசுவதை வழக்கமாக கொண்டுள்ளார். ஏற்கனவே கடந்த வருடம் சென்னை பாஜக தலைமை அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசிய இவரே, இம்முறை ஆளுநர் மாளிகை முன்பு வீசினார்.

ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு.!

அதுவும், ஏற்கனவே உள்ள  வழக்கில் இருந்து ஜாமீனில் வெளிவந்த உடனே இந்த சம்பவத்தை மேற்கொண்டுள்ளார். பெட்ரோல் குண்டு வீச்சு விவகாரம் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் அவர் மீது நிலுவையில் உள்ளது. அந்தவகையில், தற்போது ஆளுநர் மாளிகையின் முன் பெட்ரோல் குண்டு வீசியது தொடர்பாக  கருக்கா வினோத் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும், கருக்கா வினோத்துக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைத்து விசாரிக்க உத்தரவிடப்பட்டு தற்போது கருக்கா வினோத் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரிடம் தொடர்ந்து காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது. இதனிடையே, இந்த சம்பவத்துக்கு எதிர்க்கட்சிகள் கண்டங்களை தெரிவித்தனர். பாதுகாப்பு மிகுந்த ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது, சட்டம் – ஒழுங்கு சீர்கேட்டை குறிக்கிறது என்றனர்.

முதல்வராக ஒரு கருத்து.. பிரதமரான பிறகு ஒரு கருத்து.! முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் குற்றசாட்டு.!

இந்த நிலையில், நீதிமன்ற காவலில் இருக்கும் கருக்கா வினோத் ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீச காரணம் என்ன? என்று காவல்துறையிடம் வாக்குமூலம் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நீட் தேர்வால் மாணவர்கள் தற்கொலை என்ற செய்தி மன உளைச்சலை ஏற்படுத்தியதால் பெட்ரோல் குண்டு வீசினேன் என கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, கருக்கா வினோத் வாக்குமூலத்தில், சிறையில் இருந்த போது நீட் தற்கொலை தொடர்பான செய்திகளை படித்த போது மன உளைச்சல் ஏற்பட்டது.

ஆறாம் வகுப்பு படிக்கும் தன் மகனை மருத்துவ கல்லூரியில் சேர்க்க வேண்டும் என்ற ஆசை உள்ளது. நீட் தேர்வு இருந்தால் தன் மகனின் மருத்துவ கனவு பறிபோகும் என்பதால் பெட்ரோல் குண்டு வீசினேன் என கூறினார். மேலும்,  பிஎப்ஐ அமைப்பினருக்கும், தனக்கும் எந்த தொடர்புமில்லை. 10 ஆண்டுகளுக்கும் மேல் சிறையில் உள்ளவர்களை விடுவிக்க ஆளுநர் கையெழுத்திட வேண்டும் என்றும் சிறையில் இருந்து வெளியே வந்ததற்கு பிறகு யாரையும் சந்திக்கவில்லை எனவும் வாக்குமூலம் அளித்ததாக கூறப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்