தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பாப்பிரெட்டிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் திருமலை. இவரது மகள் நிவேதா (23) ,இவர் சேலத்தில் உள்ள பெரியார் பல்கலைக் கழகத்தில் தாவரவியல் 2-ம் ஆண்டு படித்து வந்தார். நிவேதா அங்கு உள்ள விடுதியில் தங்கி இருந்து படித்து வந்தார்.
கடந்த 11-ம் தேதி மின் விசிறியில் தூக்கு மாட்டி நிவேதா தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து போலீசார் கூறுகையில் , நிவேதா கடந்த 10-ந் தேதி அன்று தூக்குப்போட்டு தற்கொலை செய்துள்ளார்.
ஆனால் 11-ம் தேதி இரவு 7 மணிக்கு தான் மாணவிகள் காப்பாளருக்கு தகவல் கொடுத்துஉள்ளனர். விடுதியில் நிவேதாவுடன் தங்கி இருந்த மாணவிகள் ஆய்வறிக்கை தயாரிப்பதற்காக களஆய்வுக்கு சென்று விட்டனர்.இந்நிலையில் நிவேதா மட்டும் விடுதியில் இருந்துள்ளார்.
மாணவியின் அறையில் இருந்து டைரி, 3 பக்க காதல் கடிதம் மற்றும் செல்போன் கிடைத்து உள்ளது. மாணவி ஒருதலையாக ஒரு வாலிபர் ஒருவரை காதலித்து வந்துள்ளார். ஆனால் அந்த வாலிபர் இவரின் காதலுக்கு மறுப்பு தெரிவித்து உள்ளார். இதனால் மனமுடைந்த நிவேதா விடுதியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
மேலும் மாணவியின் செல்போனில் உள்ள எண்களை வைத்து விசாரணை நடத்த உள்ளோம். விசாரணை முடிந்தால் தான் தற்கொலைக்கான முழுமையான காரணம் தெரியும் என கூறினார்.
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…