மழைக்கால கூட்டத்தொடரில் கொரோனா தொடர்பாக விவாதிப்பார்களா என்ற சந்தேகம் உள்ளது என டி.ஆர் பாலு தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நாளை முதல் ஆகஸ்ட் மாதம் 13ம் தேதி வரை நடைபெறும் என மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிவித்திருந்தார். இதைதொடர்ந்து, நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரை சுமூகமாக நடத்துவது தொடர்பாக நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது.
அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு பின் திமுக மக்களவை குழுத்தலைவர் டி.ஆர்.பாலு பேட்டியளித்தார். அப்போது, பெட்ரோல், டிசல் விலை உயர்வு மேகதாது, நீட் தேர்வு உள்ளிட்ட 13 பிரச்சனைகளை எழுப்ப திட்டம். தமிழ்நாட்டின் பிரச்னைகளை பேச இருப்பது குறித்து தெரிவித்தோம். மேகதாது அணை கட்ட மாட்டோம் என்பது தொடர்பாக பிரதமர் நாடாளுமன்றத்தில் உறுதி அளிக்க வேண்டும்.
பொருளாதார வீழ்ச்சி விவசாயப் பிரச்சினை உள்ளிட்ட 13 பிரச்சினைகள் குறித்து அவையை ஒத்தி வைத்து விவாதிக்க வேண்டுமென திமுக சார்பில் நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதிக்காமல் பிரதமர் தனியாக பவர் பாயின்ட் மூலம் விளக்கம் தருவார் என கூறப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தோம்.
கொரோனா தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என வலியுறுத்தினோம். ஆனால், விவாதிப்பார்களா என்ற சந்தேகம் உள்ளது. நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்களிக்க வேண்டும் என கவனஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்படும். 19 நாள் நடைபெற உள்ள நாடாளுமன்ற கூட்டத்தொடரில் 31 மசோதாக்களை எப்படி விவாதிக்க முடியும் என டி.ஆர். பாலு கேள்வி எழுப்பினார்.
நியூ யார்க் : மெட்டா நிறுவனத்தின் தலைமை அதிகாரி மார்க் ஸுக்கர்பர்க் அண்மையில், தி ஜோ ரோகன் எக்ஸ்பீரியன்ஸ் போட்காஸ்ட்…
புனே : இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த பிறகு இந்திய ராணுவத்தை அதிகாரபூர்வமாக அங்கீகரித்து முதன் முறையாக இந்தியாவுக்கு என அதிகாரபூர்வ…
"கரும்பு தின்ன கூலியா' என்ற பழமொழிக்கு ஏற்ப கரும்பு சாப்பிடுவதால் பற்கள் முதல் ஜீரண மண்டலம் வரை பல நன்மைகளை…
சென்னை : வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வாடிவாசல் எனும் திரைப்படம் தயாராக உள்ளது என அறிவித்து ஆண்டுகள் கடந்து…
சென்னை : z024ஆம் ஆண்டு பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 10 நபர்களுக்கு விருதுகளையும், பரிசுத்தொகையையும் முதலமைச்சார் மு.க.ஸ்டாலின் இன்று…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பிரமாண்ட மஹா…