விஜய் பேசியது சினிமா வசனம்..அதனை கொள்கையா எடுத்துக்காதீங்க – ப.சிதம்பரம் கருத்து!
ஃபாசிசம் குறித்து தவெக மாநாட்டில் விஜய் பேசியதற்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தபோது கருத்து தெரிவித்துள்ளார்.

சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு கடந்த 27-ஆம் தேதி விழுப்புரம் விக்கிரவாண்டி வி.சாலையில் பிரமாண்டமாக நடைபெற்று முடிவடைந்தது. மாநாட்டில் அக்கட்சித் தலைவர் விஜய் பேசிய பல விஷயங்களும் அரசியல் வட்டாரத்தில் பெரிய அளவில் பேசுபொருளாகவும் மாறியிருக்கிறது. குறிப்பாக, அவர்கள் பாசிசம்னா, நீங்க என்ன பாயாசமா.? நீங்களும் அவர்களுக்கு ஒன்னும் சளச்சவங்க இல்ல என திமுக அரசை நேரடியாகவும், பாஜகவை மறைமுகமாகவும் விமர்சித்துப் பேசியிருந்தார்.
Read More- “அவங்க பாசிசம்னா., நீங்க பாயாசமா.?” திமுகவை நேரடியாக விளாசிய விஜய்.!
இந்நிலையில், விஜயின் பேச்சுக்குப் பல அரசியல் தலைவர்கள் ஆதரவு தெரிவித்துப் பாராட்டி வருவது போல, மற்றொரு பக்கம் சிலர் விஜயின் பேச்சு சினிமா வசனம் போல இருக்கிறது என விமர்சனம் செய்து பேசி வருகிறார்கள். குறிப்பாக, விசிக தலைவர் திருமாவளவன் விஜய் நடத்தியது சினிமா மாநாடு என விமர்சித்து இருந்தார்.
அவரை தொடர்ந்து காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் இன்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது விஜய் பேசியது சினிமா வசனம் சினிமா வசனத்தையெல்லாம் கொள்கையா எடுத்துக் கொள்ளாதீர்கள் என்பது போலப் பேசியிருக்கிறார். இது குறித்துப் பேசிய அவர் ” த.வெ.க மாநாட்டில் விஜய் பேசிய சில விஷயங்கள் எனக்கு மகிழ்ச்சி தந்தது. சில விஷயங்கள் மகிழ்ச்சி தரவில்லை.
விஜய் புதிய கட்சியைத் தொடங்கி இருப்பதற்கு அவருக்கு நான் என்னுடைய வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அதன் கோட்பாடாக ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என அறிவித்து இருக்கிறார். அவர் காங்கிரஸ் உடைய சில கொள்கைகளைப் பின்பற்றிப் பேசிய சில விஷயங்கள் எனக்கு மகிழ்ச்சி அளித்தது.ஆனால், அதே சமயம் அவர் பேசிய சில விஷயங்கள் மகிழ்ச்சி தரவில்லை.
அவர் ஃபாசிசமா, பாயாசமா? எனப் பேசியிருந்தது வசனம் என்பது போல இருந்தது. என்னைப் பொறுத்தவரை நான் சொல்வது என்னவென்றால், சினிமா வசனத்தைக் கொள்கையா எடுத்துக் கொள்ளாதீர்கள் என்று தான்” எனத் தெரிவித்தார்.
அதனைத்தொடர்ந்து செய்தியாளர்கள் ஆட்சி அமைப்பது சத்தியம் ஆகுமா? என்பது போலக் கேள்வி எழுப்பினார். அதற்கும் பதில் அளித்த ப.சிதம்பரம் ” இது எல்லாம் அவர் கிட்டத்தான் நீங்கள் கேட்கவேண்டும். யார் ஆட்சியைப் பிடிப்பார்கள் என்பதைத் தேர்தல் தான் முடிவு செய்யும். எனவே, சாத்தியமா இல்லையா என்பதை இப்போது சொல்ல முடியாது. ஒரு காலத்தில் மத்திய அரசில் தனிக்கட்சி தான் ஆட்சி செய்யும் என்று இருந்தது.
ஆனால், 1996-க்கு பிறகு மத்திய அரசில் பல கட்சிகள் ஆட்சி செய்கின்றன. எனவே, சத்தியம் இல்லாதது எல்லாம் ஒரு காலத்தில் சாத்தியம் ஆகியது. எனவே, எது வேண்டுமானாலும் சாத்தியம் ஆகலாம். எல்லாத்தையும் போகப் போக தான் சொல்ல முடியும்” எனவும் ப.சிதம்பரம் தெரிவித்தார்.
லேட்டஸ்ட் செய்திகள்
வடிவேலு – சுந்தர்.சியின் அடுத்தடுத்த காமெடி அட்டகாசம்.., கேங்கர்ஸ் படத்தின் புதிய ட்ரைலர் இதோ…
April 1, 2025
“எங்கள் ஊரில் தமிழ், தெலுங்கு, மலையாளம் சொல்லி தருகிறோம்..,” யோகி ஆதித்யநாத் பெருமிதம்!
April 1, 2025