மொபைல் போன் தொலைந்தால் என்ன செய்ய வேண்டும் …? வேலூர் எஸ்.பி கொடுத்த சூப்பர் டிப்ஸ்..!
வேலூர் மாவட்டத்தில் காணாமல் போன மற்றும் களவுபோன செல்போன்களை கண்டுபிடித்து அதை உரிய நபர்களிடம் வழங்கும் நிகழ்வு இன்று வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியின் போது சுமார் 9 லட்சம் மதிப்புள்ள 60 செல்போன்கள் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் வேலூர் மாவட்ட எஸ்பி ராஜேஷ் கண்ணன் அவர்கள் கலந்து கொண்டுள்ளார். அப்பொழுது பேசிய ராஜேஷ் கண்ணன், காணமல் போன மொபைல் போனை சுலபமாக கண்டுபிடிக்க முடியும். மொபைல் போனை தவறவிட்டவர்கள் செய்ய வேண்டியது என்னவென்றால், அருகில் உள்ள காவல் நிலையத்தில் முதலில் புகார் அளிக்க வேண்டும்.
மேலும் தொலைந்த தங்களது செல்போனில் ஐஎம்இஐ எண் அல்லது காணாமல் போன மொபைல் போனில் பயன்படுத்திய தொலைபேசி எண் ஆகியவற்றைக் கொடுத்து புகார் அளிக்கலாம். நேரில் மட்டுமல்ல இணையதளம் மூலமாகவும் செல்போன் காணாமல் போனவர்கள் புகார் அளிக்கலாம் என தெரிவித்துள்ளார்.