புத்தாண்டு அன்று என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது..? தெரிந்து கொள்ளுங்கள்..!

புத்தாண்டு மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்க வேண்டும் என்று அனைவரும் விரும்புகிறார்கள். மக்கள் புத்தாண்டு அன்று சில முடிவுகளை எடுக்கிறார்கள். ஆனால் புத்தாண்டு அன்று அதிகப்படியான சந்தோசம் காரணமாக, நாம் சில தவறுகளை செய்கிறோம். இதன் காரணமாக ஆண்டின் ஆரம்பம் சிறப்பாக அமைவதில்லை. புத்தாண்டின் முதல் நாளில் வாஸ்து சாஸ்திர பரிகாரங்களைச் செய்வதன் மூலம், ஒரு நபர் மகிழ்ச்சி, அமைதி மற்றும் செல்வத்தின் நன்மைகளைப் பெறுகிறார். புத்தாண்டில் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என்று பார்ப்போம்.

புத்தாண்டின் முதல் நாளில் இதை செய்ய வேண்டும்:

பெரியவர்களின் ஆசிர்வாதம்:

புத்தாண்டை வரவேற்று, பெரியவர்களின் ஆசிர்வாதத்தைப் பெற்று அன்றைய நாளைத் தொடங்குங்கள். இந்த நாளில், உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு புத்தாண்டு வாழ்த்துக்கள் தெரிவிக்கவும்.

சிவலிங்க வழிபாடு:

புத்தாண்டின் முதல் நாளில், செம்புப் பாத்திரத்தில் தண்ணீர் நிரப்பி, அதில் குங்குமம் சேர்க்கவும். அதன் பிறகு சிவலிங்கத்தின் மீது அர்ச்சனை செய்யுங்கள். பூஜையின் போது, ​​’ஓம் மஹாதேவாய நம’ என்ற மந்திரத்தை 108 முறை உச்சரிக்கவும். இவ்வாறு செய்வதால் வீட்டில் மகிழ்ச்சியும், செழிப்பும் உண்டாகும்.

ஏழைகளுக்கு தானம் செய்யுங்கள்:

புத்தாண்டின் முதல் நாளில், ஏழைகளுக்கு தானம் செய்யுங்கள். இவ்வாறு செய்வதால் வாழ்வில் மகிழ்ச்சியும் அமைதியும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. புத்தாண்டின் முதல் நாளில் ஏழை எளியவருக்கு உதவி செய்தால் ஆன்மீக அமைதி கிடைக்கும்.

செலவுகளில் கவனமாக இருங்கள்:

புத்தாண்டை ஆடம்பரமாகவும் மறக்கமுடியாத வகையிலும் கொண்டாட மக்கள் தங்கள் உற்சாகத்தில் தேவைக்கு அதிகமாக செலவிடுகிறார்கள். அவர்கள் தங்கள் பட்ஜெட்டை விட அதிகமாக செலவழிக்கும்போது இதை நினைவில் கொள்ள மாட்டார்கள், ஆனால் அவர்கள் பின்னர் வருத்தப்படலாம்.

 லட்சுமிக்கு ஒற்றை தேங்காய்:

உங்கள் வாழ்க்கையில் பணப்பிரச்சனை இருந்தால், புத்தாண்டின் முதல் நாளில் காலையில் குளித்த பிறகு விஷ்ணு மற்றும் லட்சுமியை வணங்குங்கள். இந்த நேரத்தில், லட்சுமி தேவிக்கு ஒற்றை தேங்காயை உடைக்கவும். இதற்குப் பிறகு, அதை சிவப்பு துணியில் கட்டி பாதுகாப்பாக வைக்கவும், புத்தாண்டின் முதல் நாளில், நீங்கள் கோவிலுக்கு செல்லலாம், அல்லது வீட்டில் பூஜை செய்யலாம்.

புத்தாண்டின் முதல் நாளில் இவற்றைச் செய்யாதீர்கள்:

கருப்பு நிறம்:

புத்தாண்டின் முதல் நாளில் கருப்பு ஆடைகளை அணிய வேண்டாம். மேலும் புனித நூல்களின்படி, எந்தவொரு நல்ல வேலையையும் அல்லது நல்ல நாளையும் நல்ல வண்ண ஆடைகளை அணிந்து தொடங்க வேண்டும்.

கடன் வாங்காதீர்கள்:

2024 ஆம் ஆண்டின் முதல் நாளில் யாரிடமும் கடன் வாங்காதீர்கள். புத்தாண்டின் தொடக்கத்தில் கடன் வாங்கினால், அதைத் திருப்பிச் செலுத்துவதிலோ அல்லது திரும்பப் பெறுவதிலோ சிரமம் ஏற்படும்.

அசைவ உணவை உட்கொள்ளக்கூடாது:

புத்தாண்டுக்கு முதல் நாளில் அசைவ உணவு உட்கொள்ளக்கூடாது. புத்தாண்டு தினத்தில் லட்சுமி தேவியை முறைப்படி வழிபடுவது வழக்கம். இந்த நாளில் அசைவ உணவுகளில் இருந்து விலகி இருக்க வேண்டும்.

கூர்மையான பொருட்களை வாங்காதீர்கள்:

புத்தாண்டின் முதல் நாளில் கூர்மையான பொருட்களை வாங்காதீர்கள். இதைச் செய்வது வாஸ்து மற்றும் ஜோதிடத்தில் அசுபமாக கருதப்படுகிறது. இதைச் செய்வதால் பண இழப்பு ஏற்படலாம்.

 

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

MS Dhoni OUT
Chennai Super Kings vs Kolkata Knight Riders
mp kanimozhi
Chennai Super Kings vs Kolkata Knight Riders toss
BJP MLA Nainar Nagendran
amitshah about dmk