என்ன சொல்கிறது “புதிய வாகன சட்ட திருத்த மசோதா” – முழு அலசல்!
மத்திய அரசு தற்போது நடைமுறையில் இருக்கும் வாகன சட்டத்தை திருத்தியமைக்க திட்டமிட்டுள்ளது. நாடாளுமன்ற மக்களவையில் நிறைவேற்றப் பட்டுள்ள இந்த புதிய மசோதா மாநிலங்களவையில் விரைவில் நிறைவேற்றப்படும் என்று தெரிகிறது. இந்த புதிய வாகன சட்ட திருத்த மசோதாவில் இடம்பெற்றுள்ள அம்சங்கள் குறித்து பார்க்கலாம்.
புதிய வாகன சட்ட திருத்த மசோதாவில் வாகனம் ஓட்டும் போது செய்யும் தவறுகளுக்கான அபராத தொகை பல மடங்கு உயர்ந்துள்ளது.
அதன்படி, வாகனம் ஓட்டும் பொது செய்யும் சிறு தவறுகளுக்கு குறிப்பாக இண்டிகேட்டர் போடாமல் சென்றாலோ அபராதமாக செலுத்தும் தொகை 100 லிருந்து 500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டினால் 500 ல் இருந்த அபராதம் 2000 ஆகவும்,
ஹெல்மெட் இல்லாமல் ஓட்டினால் 100 ல் இருந்த அபராதம் 1000 ஆகவும்,
மது குடித்து விட்டு வாகனம் ஓட்டினால் 2000 ல் இருந்து 10000 ஆகவும்,
சீட் பெல்ட் அணியாமல் வாகனம் ஓட்டினால் 100 ல் இருந்து 1000 ஆகவும்,
அனுமதிக்கப்படாத வாகனம் ஓட்டினால் 5000 ல் இருந்து 10000 ஆகவும்,
காப்பீடு இல்லாமல் வாகனம் ஓட்டினால் 100 ல் இருந்து 2000 ஆகவும்,
அதிவேகமாக வண்டி ஓட்டினால் 400 ல் இருந்து 2000 வரையும் அபராதம் வசூலிக்கப்படும் வகையில் புதிய சட்டம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
அதே போல், சிறுவர்கள் வாகனம் ஓட்டினால் 25,000 வரையில் அபராதமும் பெற்றோர்க்கு 3 ஆண்டு சிறை, வாகன உரிமம் ரத்து, சிறார்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.