நிற்காமல் சென்ற லாரி.. விறுவிறு சேஸிங்.. இறுதியில் என்கவுன்டர்! லாரி உரிமையாளர் கூறுவது என்ன?
குமாரபாளையத்தில் பிடிபட்ட லாரி உரிமையாளர் சலீம் கான் பிரபல தனியார் ஊடக ஒன்றிக்கு தொலைபேசியில் பேட்டி அளித்துள்ளார்.
நாமக்கல் : கேரளாவில் ATM-களில் கொள்ளையடித்த கொள்ளைக்கும்பல் தப்பி வந்த கண்டெய்னர் லாரி நாமக்கல் – பச்சாபாளையம் அருகே பிடிபட்டது. பச்சாபாளையம் அருகே லாரி பிடிக்கப்பட்டு கண்டெய்னரை திறக்கும் போது உள்ளே ஆயுதங்களுடன் இருந்த கொள்ளையர்கள் தாக்க, போலீசார் பதிலுக்கு துப்பாக்கிசூடு நடத்தியுள்ளனர்.
அதில், ஒரு கொள்ளையன் உயிரிழந்தனர். பின்னர், ஓட்டுநர் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பின்னர், அந்த லாரியின் கண்டெய்னர் பெட்டியை திறந்து பார்க்கையில், அதனுள்ளே ஒரு சொகுசு கார் இருந்ததும், அதிலும் கொள்ளையர்கள் இருந்ததும் தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் படத்தில் வரும் சேஸிங் சீன் போல், தமிழ்நாடு போலீசார் இந்த அதிரடி வேட்டையை நடத்தியுள்ளனர். இன்று காலை கேரளாவில் 3 ஏடிஎம் நிலையத்தில் கொள்ளை முயற்சி நடந்த நிலையில், லாரியில் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது சந்தேகத்தை எழுப்பியுள்ளது. இது தொடர்பாக 3 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
அதன்படி, கண்டெய்னரில் இருந்தது, கேரளாவில் ஏடிஎம்களில் கொள்ளையடிக்கப்பட்ட பணம் தான் என்று விசாரணையில் தெரிய வந்துள்ளது. தற்போது சம்பவ இடத்தில் சேலம் சரக ஐஜி உமா மற்றும் நாமக்கல் காவல் கண்காணிப்பாளர் ராஜேஸ் கண்ணா ஆகியோர் ஆய்வு செய்து வருகின்றனர்.
தற்பொழுது, குமாரபாளையத்தில் பிடிபட்ட லாரி உரிமையாளர் சலீம் கான் பிரபல தனியார் ஊடக ஒன்றிக்கு தொலைபேசியில் பேட்டி அளித்துள்ளார்.
லாரி உரிமையாளர் சொல்வது என்ன?
பிடிபட்ட லாரி எங்களுடையது தான். இதேபோல் 12 லாரிகளை வைத்திருக்கிறோம். லாரிகளை ஒப்பந்த அடிப்படையில் வெளி நிறுவனங்களுக்கு வாடகைக்கு கொடுத்துள்ளோம். சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் நடவடிக்கைகள் குறித்தும், பணியாளர்கள் குறித்தும் எங்களுக்கு தெரியாது என்று லாரி உரிமையாளர் லீம் கான் கூறியுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக, கூடுதல் தகவலாக சலீம் கான் வாடகைக்கு கொடுத்திருந்த இந்த லாரியின் தனியார் நிறுவனத்தின் உரிமையாளர் பெயர் சாஃபர் என்றும் தெரியவந்திருக்கிறது. ஆனால், சலீம் கானுக்கும் சாஃபருக்கும் எந்தவித தொடர்பும் கிடையாது என்றும் கூறியுள்ளார்.
வாடகைக்கு லாரியை கொடுப்பது உண்டு. அது போல் தான் இந்த லாரியை அனுப்பியதாகவும், இந்த சம்பவம் நடந்தது குறித்து தனியார் ஊடகம் சொல்லிய பிறகே தெரியும் என்றும், இது பற்றிய கூடுதல் தகவலை அந்த நிறுவனத்திடம் கேட்டு சொல்வதாக சலீம் கான் கூறியிருக்கிறார்.