சசிகலா சொல்வது ஜமுக்காளத்தில் வடிகட்டின பொய் – ஜெயக்குமார்
திமுகவின் பி டீம் ஆக பண்ருட்டியார் செயல்படுகிறார் என ஜெயக்குமார் விமர்சனம்.
சுனாமி நினைவு தினத்தை ஒட்டி அஞ்சலி செலுத்திய பின்னர், அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், திமுகவின் பி டீம் ஆக பண்ருட்டியார் செயல்படுகிறார் வளர்ந்த கட்சியைப் பற்றியே விமர்சனம் செய்வதா? என கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், அதிமுகவை இணைக்க பேச்சு நடப்பதாக சசிகலா கூறுவது ஜமுக்காளத்தில் வடிகட்டின பொய். பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்தவர் சசிகலா என விமர்சித்துள்ளார்.