பொன்னையன் பேசியது உண்மை என கோலப்பன் செய்தியாளர்களுக்கு பேட்டி.
அதிமுகவின் முன்னாள் அமைச்சரும், மூத்த தலைவருமான பொன்னையன் அதிமுக தலைவர்களை விமர்சித்து பேசுவதாக ஓபிஎஸ் ஆதரவாளரான கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி நேற்று செய்தியாளர் சந்திப்பின்போது ஆடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். இது பெரும் சர்ச்சையான நிலையில் இந்த ஆடியோ தான் பேசியதில்லை என பொன்னையன் மறுப்பு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பொன்னையன் கூறுகையில், அதிமுக நிர்வாகி கோலப்பன் உட்பட யாரிடமும் தான் பேசவில்லை என்றும், தொழில்நுட்பத்தை பயன்படுத்தி என் குரல் மிமிக்ரி செய்யப்பட்டுள்ளது. தற்போது வெளியாகி உள்ள ஆடியோ போலியானது. எடப்பாடி பழனிசாமி மற்றும் கே.பி.முனிசாமி அவர்கள் மீது எனக்கு மிகப்பெரிய ம மரியாதை உள்ளது என்று அவர் தெரிவித்திருந்தார்.
இதுநிலையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கன்னியாகுமரி அதிமுக நிர்வாகி கோலப்பன், பொன்னையன் என்னிடம் பேசியது உண்மைதான். ஆனால் தற்போது அதை மறுத்து பேசுகிறார். இதையெல்லாம் மிமிக்ரி செய்ய வேண்டிய அவசியம் இல்லை. அவர் என்னிடம் பேசியதற்காக ஆதாரம் உள்ளது. எனவே இதை மறுக்க முடியாது.
ஜூலை 9ஆம் தேதி, இரவு 9:59 மணிக்கு என்னுடன் பேசியுள்ளார். அதற்கான ஆதாரங்கள் இருக்கிறது. என்னுடைய கால் ரெக்கார்டை பார்த்தாலே அது தெரிந்துவிடும். அதை தேவைப்படும் நேரத்தில் வெளியிடுவேன் என தெரிவித்துள்ளார். அதிமுகவில் ஏற்கனவே குழப்பமான சூழல் நிலவும் நிலையில் தற்போது பொன்னையன் பேசிய விவகாரமும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஜார்க்கண்ட் : மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டப் பேரவைத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று காலை 8மணி முதலே எண்ணப்பட்டு…
மேற்கு வங்கம் : மேற்குவங்கத்தில நடந்த இடைத்தேர்தலில் 6 தொகுதிகளிலும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. முன்னதாக…
மும்பை : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்டு வந்த நிலையில்,…
பீகார் : மாநிலத்தில் பெலகஞ்ச், இமாம்கஞ்ச், ராம்கர் மற்றும் தராரி ஆகிய நான்கு தொகுதிகளின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. தராரி…
கேரளா : கேரளாவின் வயநாடு எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ததை அடுத்து, அங்கு அவரது தங்கை கேரளா…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு பிரமாண்டமாகக் கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம்…