பிரதமர் மோடியின் உரை குறித்து மு.க.ஸ்டாலின் விமர்சனம்.!
நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு இன்றுடன் நிறைவடைய இருந்த நிலையில், கொரோனாவை தடுக்க ஊரடங்கு நீடிப்பது தொடர்பாக பிரதமர் மோடி காணொளிக்காட்சி மூலம் நாட்டு மக்களுக்கு முக்கிய அம்சங்களை தெரிவித்துள்ளார். இன்றுடன் நிறைவடைய இருந்த ஊரடங்கு, மே 3 ஆம் தேதி வரை நீட்டிப்பு என கூறினார். நீடிக்கப்பட்ட ஊரடங்கு காலகட்டத்திற்கான புதிய வழிமுறைகள் நாளை வெளியிடப்படும் எனவும் குறிப்பிட்டார். அத்தியாவசிய தேவைக்கு வெளியே வரும்போது தனிமனித இடைவெளி அவசியம் என்றும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். கொரோனாவை விரட்ட அனைவரும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என பிரதமர் கூறிருந்தார்.
இந்நிலையில், ஆறுதல் தரும் வகையிலான உரையை பிரதமர் மோடி எப்போது ஆற்ற போகிறார் என்றும் மருத்துவ உபகரணங்கள், நோய் கண்டறியும் கருவிகள் எப்பொழுது தருவீர்கள்.? மத்திய அரசு எடுக்கும் முடிவுகள் மக்கள் நலன் சார்ந்ததாக இல்லை என்று திமுக தலைவர் முக ஸ்டாலின் அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவரது பதிவில், பிரதமர் மோடி வழங்கிய 7 அறிவுரைகள் மக்களுக்கு இன்னும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது. மேலும் மக்கள் எதிர்பார்ப்பது அறிவுரைகள் மட்டுமல்ல, நிவாரண உதவிகள் மற்றும் பொருள் உதவிகள் என குறிப்பிட்டுள்ளார். மேலும் மக்கள் மனதில் உள்ள கேள்விகளுக்கு, பதில் சொல்லும் உரையை எப்போது ஆற்றப் போகிறீர்கள்? என முக ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார்.
பிரதமர் @narendramodi வழங்கிய 7 அறிவுரைகள் மக்களுக்கு இன்னும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.
மக்கள் எதிர்பார்ப்பது அறிவுரைகள் மட்டுமல்ல; நிவாரண உதவிகள் – பொருள் உதவிகள்!
மக்கள் மனதில் உள்ள கேள்விகளுக்கு, பதில் சொல்லும் உரையை எப்போது ஆற்றப் போகிறீர்கள்? #Lockdown2 pic.twitter.com/0I3Ja05s1E
— M.K.Stalin (@mkstalin) April 14, 2020