என்ன மக்களே ‘ரிப்பன் மாளிகை’ பார்க்க ரெடியா? அப்போ இப்போவே விண்ணப்பியுங்கள்!!
ரிப்பன் மாளிகையைச் சுற்றி பார்க்க ஆசைபடுவோருக்கு சென்னை மாநகராட்சி ஒரு அறிய வாய்ப்பை அறிவித்துள்ளது.

சென்னை : நம் சிறு வயது முதல் சென்னையில் அமைந்துள்ள ரிப்பன் மாளிகையை கடந்து செல்லும் போதெல்லாம் இந்த மாளிகைக்குள் என்ன இருக்கும்? எப்படி இருக்கும்? என ஆவளோடு நினைத்திருப்போம். அதற்கு இத்தனை வருடங்கள் களித்து தற்போது ஒரு அறிய வாய்ப்பானது கிடைத்துள்ளது.
சுமார் 111 ஆண்டுகள் பழமையான இந்த ரிப்பன் மாளிகையைச் சுற்றிப் பார்க்க சென்னை மாநகராட்சி பொதுமக்களுக்கு ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதன்படி, விண்ணப்பித்து சுற்றிப் பார்ப்போருக்கு சென்னை மாளிகையின் வரலாறு, அதன் கட்டுமான வரலாறு, சென்னையின் வரலாறு மற்றும் சென்னை மாநகராட்சியின் வரலாறு என நிறைய தெரிந்து கொள்ளும் வண்ணம் அமையும் என மாநகராட்சி தெரிவித்துள்ளது.
எப்படி விண்ணப்பிப்பது?
ரிப்பன் மாளிகையைச் சுற்றிப் பார்ப்பதற்கு, [email protected] என்ற இமெயில் மூலமாகவோ அல்லது 9445190856 என்ற எண்ணைத் தொடர்பு கொண்டோ விண்ணப்பித்துக் கொள்ளலாம் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.