குடியரசு நாள் அணிவகுப்பில் ஏற்க முடியாத காரணங்களைக் கூறி தமிழ்நாட்டின் அலங்கார ஊர்திக்கு இடம் மறுக்கக் கூடாது என டாக்.ராமதாஸ் ட்வீட்.
டெல்லியில் நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பில் கலந்து கொள்ள கோரிக்கை செய்து தமிழக அரசு சார்பில் வ.உ.சி, வேலுநாச்சியார், பாரதியார், கப்பலோட்டிய தமிழர் உள்ளிட்ட சுதந்திர போராட்ட வீரர்களின் உருவப்படங்கள் அடங்கிய ஊர்திகள் காண்பிக்கப்பட்டுள்ளது. ஆனால், தமிழகத்தின் சார்பில் கொடுக்கப்பட்ட ஊர்திகள் மத்திய அரசால் நிராகரிக்கப்பட்டுள்ளது.
இதற்கு அரசியல் கட்சியினர் பலரும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், பாமக நிறுவனர் ராமதாஸ் அவர்கள் இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், ‘.தில்லியில் 26ஆம் தேதி நடைபெறவிருக்கும் குடியரசு நாள் அணிவகுப்பில் வஉசி, பாரதியார், வேலுநாச்சியார் மற்றும் மருது சகோதரர்கள் உருவங்கள் அடங்கிய தமிழக அரசின் அலங்கார ஊர்திக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டிருப்பது ஏமாற்றமளிக்கிறது. அதற்காக கூறப்படும் காரணம் ஏற்க முடியாதது!
இந்திய விடுதலையின் 75-ஆவது ஆண்டு கொண்டாடப்படுகிறது. இந்த சிறப்பான தருணத்தில் விடுதலைக்காக போராடிய இவர்களின் உருவம் அடங்கிய அலங்கார ஊர்தி அணிவகுப்பில் இடம் பெறுவதே சிறப்பு. அவர்களை வெளிநாட்டு தலைவர்களுக்கு தெரியாது என்று கூறுவது தவறான வாதம்!
வ.உ.சியின் 150 ஆவது ஆண்டு விழா இப்போது கொண்டாடப்படுகிறது. பாரதியார் உலகறிந்த கவிஞர். வேலுநாச்சியாரின் வீரத்தை அண்மையில் தான் பிரதமர் பாராட்டியிருந்தார். மருது சகோதரர்கள் வேலுநாச்சியாரின் போராட்டத்தை தொடர்ந்தவர்கள். இவற்றை விட வேறு என்ன தகுதி வேண்டும்?
குடியரசு நாள் அணிவகுப்பில் ஏற்க முடியாத காரணங்களைக் கூறி தமிழ்நாட்டின் அலங்கார ஊர்திக்கு இடம் மறுக்கக் கூடாது. மத்திய அரசு அதன் முடிவை மாற்றிக் கொண்டு தமிழ்நாட்டின் அலங்கார ஊர்தி அணிவகுப்பில் இடம் பெறுவதை உறுதி செய்ய வேண்டும்!’ என பதிவிட்டுள்ளார்.
கொல்கத்தா : 18 வது சீசனுக்கான ஐபிஎல் தொடர் நாளை கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் பிரம்மாண்டமாக தொடங்கப்பட உள்ளது. …
சென்னை : இன்று அதிமுக சார்பில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட அதிமுக பொதுச்செயலாளர்…
கொல்கத்தா : இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் நாளை (மார்ச் 22) -ஆம் தேதி தொடங்கப்படவுள்ளது. நாளை நடைபெறும் முதல் போட்டியில்…
டெல்லி : நாடாளுமன்றத்தில் இரண்டாவது பகுதி கடந்த மார்ச் 2-ஆம் தேதி முதல் தொடங்கிய நிலையில், வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி…
சென்னை : கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து காத்திருக்கும் சென்னை - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி வரும் மார்ச்…
சென்னை : வரும் 2026-ல் மக்கள் தொகை அடிப்படையில் மக்களவை தொகுதி மறுசீரமைப்பு நடைபெற உள்ளதாகவும், இதனால் மக்கள் தொகையை…