கிராம சபை கூட்டத்தை நடத்துவதற்கு ஸ்டாலின் என்ன மகாத்மா காந்தியா? என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் விமர்சித்துள்ளார்.
சென்னை திருவெற்றியூரில் அதிமுக சார்பில் மொழிப்போர் வீர வணக்க நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ பன்னீர்செல்வம் கலந்துகொண்டார். பின்னர் மேடையில் பேசிய அவர், தமிழகத்தின் தீய சக்தியாக ஸ்டாலின் உள்ளதாக தெரிவித்தார். ஆட்சியில் இருந்த போது தமிழகத்திற்கு கேடு விளைவிக்கும் திட்டங்களை திமுக தடுத்துள்ளார்களா என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
நீட் தேர்வுக்கு கையெழுத்திட்டது திமுக தான் என்று சுட்டிக்காட்டினார். நல்லாட்சியை தரமுடியாத ஆட்சியை நடத்திவிட்டு, மீண்டும் ஆட்சிக்கு வர தவிப்பது ஏன் எனவும் அதிமுகவின் கடைசி தொண்டன் உள்ள வரை திமுக ஆட்சிக்கு வருவதை தடுப்பார்கள் என்றும் தெரிவித்துள்ளார். அதிமுக ஆட்சியில் என்ன குறை கண்டீர்கள் என்று சொல்லுங்கள். அப்படி சொல்வதற்கு ஒன்றுமில்லை என கூறியுள்ளார்.
கிராம சபை கூட்டத்தை யார் நடத்துவது, மாவட்ட ஆட்சியர் அல்லது மாவட்ட அதிகாரிகள் தான் நடத்த வேண்டும். அதைவிட்டு ஸ்டாலின் நடத்துகிறார். சம்மணங்கால் போட்டுகொண்டு கூட்டத்தை நடத்துகிறார். கிராம சபை கூட்டத்தை நடத்துவதற்கு ஸ்டாலின் என்ன மகாத்மா காந்தியா? என்று விமர்சித்து துணை முதல்வர் பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…