7 பேர் விடுதலை :ஆளுநருக்கு அனுப்பப்பட்ட தீர்மானத்தின் தற்போதைய நிலை என்ன ?சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி

Default Image

7 பேர் விடுதலை தொடர்பாக ஆளுநருக்கு அனுப்பப்பட்ட தீர்மானத்தின் தற்போதைய நிலை என்ன ? என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
ராஜீவ்காந்தி கொலைவழக்கில் பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி, ராபார்ட் பயஸ், ஜெயகுமார், ரவிச்சந்திரன்,உள்ளிட்ட 7 பேர் சிறைதண்டனை அனுபவித்து வருகின்றனர்.
சமீபத்தில் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை விடுவிக்கக் கூடாது என்ற மனுவை  உச்ச நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்தது.மேலும் வழக்கில் சிறையில் உள்ள 7 பேர் விடுதலை விவகாரத்தில் தமிழக ஆளுநரே முடிவெடுப்பார் என்று தெரிவித்தது.ஆனால் 7 பேரையும் விடுவிக்குமாறு ஆளுநருக்கு தமிழக அமைச்சரவை பரிந்துரை செய்தது.
7 பேரை விடுவிப்பது தொடர்பாக தமிழக அரசு தகவல் தெரிவித்தது .அதற்கு உயர்நீதிமன்றம், 7 பேர் விடுதலை தொடர்பாக ஆளுநருக்கு அனுப்பப்பட்ட தீர்மானத்தின் தற்போதைய நிலை என்ன ? என்று கேள்வி எழுப்பியது.
இதற்கு தமிழக அரசு ,7 பேர் விடுதலை தொடர்பான பரிந்துரை எந்த நிலையில் இருக்கிறது என்பதை ஆளுநர் மாளிகையில் கேட்டு தெரிவிக்கிறோம் என்று தகவல் தெரிவித்தது.
இறுதியாக  இது தொடர்பாக இரண்டு வாரங்களில் தகவல் தெரிவிக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Election Result
Devendra Fadnavis - Eknath Shinde - Uddhav Thakkarey
Election Result
Manipur 90 more CAPF
TN School students
Tenkasi School Leave
DMK MP Meeting