திமுகவின் நிலை என்ன? பாஜகவுடன் தொடர் இழுபறி – இன்று வெளியாகும் அதிமுகவின் 2ம் கட்ட பட்டியல்?

Published by
பாலா கலியமூர்த்தி

அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கான இடப்பங்கீட்டில் இழுபறி நீடிக்கும் நிலையில், இன்று இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியாகும் என தகவல்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு கூட்டணி, இடப்பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையில் தமிழகத்தில் உள்ள பிரதான அரசியல் கட்சிகளான அதிமுக, திமுக ஈடுபட்டு வருகிறது. ஒருபுறம் திமுக கூட்டணி கட்சிகளுக்கு இடங்களை ஒதுக்கும் பணி தீவிரமடைந்துள்ளன. சென்னை மாநகராட்சியை பொறுத்தளவில் 200 வார்டுகள் உள்ள நிலையில், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் 1, மதிமுக 2, மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 இடங்கள் ஒதுக்க உள்ளதாக கூறப்படுகிறது.

விடுதலை சிறுத்தை கட்சி 2, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 2, இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 2 இடங்கள் ஒதுக்கீடு செய்ய முன்வந்துள்ளதாகவும்,  காங்கிரஸ் கட்சி 20 வார்டு கேட்ட நிலையில், 14 வார்டுகளை மட்டுமே திமுக ஒதுக்க உள்ளதாகவும் சென்னையில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் மேலும் 2 வார்டுகளை பெற தீவிர முயற்ச்சியில் ஈடுபட்டு வருகிறது. இன்றைக்குள் சென்னை மாநகராட்சி வேட்பாளர்களின் பட்டியலை திமுக வெளியிடும் என எதிர்பார்க்கபடுகிறது.

கூட்டணி கட்சிகள் நாளை பிற்பகல், திமுகவின் மாவட்ட செயலாளர்களுடன் ஒப்பந்தத்தை இறுதி செய்யவுள்ளன. திமுகவை பொறுத்தளவில் சட்டமன்ற தேர்தல், உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டதை போல் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் பெருபாலான இடங்களில் போட்டியிட திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.

மறுபுறம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான அதிமுகவின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று மதியத்திற்குள் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கான இடப்பங்கீட்டில் இழுபறி நீடிக்கும் நிலையில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை நேற்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே. பழனிசாமி ஆகியோர் வெளியிட்டிருந்தனர்.

அதன்படி, சிதம்பரம், நெல்லிக்குப்பம், பண்ருட்டி, விருத்தாசலம், திட்டக்குடி, விழுப்புரம், திண்டிவனம், தருமபுரி நகராட்சிகளுக்கான அதிமுக வேட்பாளர் பட்டியலை ஓபிஎஸ், இபிஎஸ் வெளியிட்டனர். அதிமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியலில், கடலூர் மாநகராட்சியின் 43 வார்டுகளுக்கான வேட்பாளர்கள், கடலூர் மற்றும் தருமபுரி மாவட்டங்களிலுள்ள நகராட்சிகளுக்கான வேட்பாளர்கள் என 298 பேர் கொண்ட பட்டியலை வெளியிட்டது அதிமுக.

அதிமுகவிற்கு வெற்றிவாய்ப்பு உள்ள இடங்களை பாஜக கோருவதால் இட பங்கீட்டில் சிக்கல் நீடித்து வருவதாகவும், இன்று மாலைக்குள்ளாக அதிமுக போட்டியிடும் இடங்களுக்கான வேட்பாளர் பட்டியல் முழுமையாக வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. இதனால், சென்னை மாநகராட்சியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாக உள்ளது என்றும் அதிமுகவுடனான கூட்டணி நிலைப்பாடு குறித்து பாஜக விரைவில் அறிவிக்கும் எனவும் எதிர்பார்க்கபடுகிறது.

அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி சென்னையிலிருந்து சேலம் பயணம் மேற்கொண்டுள்ளார். எனவே, அதிமுக -பாஜக இடையே இன்று நேரடி பேச்சுவார்த்தை நடைபெற வாய்ப்பில்லை என்றும் தொலைபேசி வாயிலாக மட்டுமே பேச்சுவார்த்தை தொடரும் என தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே, அதிமுக கூட்டணியில் உள்ள தமிழ் மாநில காங்கிரஸ் உடன் இன்று மாலை இரண்டாம் கட்ட இறுதி பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.

Recent Posts

பள்ளி கழிவுநீர் தொட்டியில் விழுந்து குழந்தை பலி… ரூ.3 லட்சம் அறிவித்தார் ஸ்டாலின்.!

பள்ளி கழிவுநீர் தொட்டியில் விழுந்து குழந்தை பலி… ரூ.3 லட்சம் அறிவித்தார் ஸ்டாலின்.!

சென்னை: விக்கிரவாண்டியில் தனியார் பள்ளியில் செப்டிக் டேங்கில் விழுந்து, லியா லட்சுமி என்ற 5 வயது குழந்தை உயிரிழந்தது. செப்டிக் டேங்கின்…

5 hours ago

பொங்கலை முன்னிட்டு தாம்பரம் – திருச்சி இடையே 9 நாட்களுக்கு சிறப்பு ரயில்.!

சென்னை: பொங்கல் திருநாளையொட்டி சொந்த ஊருக்கு செல்லும் மக்களுக்காக திருச்சி -தாம்பரம் - திருச்சி இடையே ஜன் சதாப்தி சிறப்பு…

6 hours ago

புதுச்சேரி மக்களுக்கு குட்நியூஸ்… பொங்கல் பரிசு அறிவிப்பு! எவ்வளவு தெரியுமா?

புதுச்சேரி: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரியில் பொங்கல் தொகுப்பிற்கு பதிலாக, அனைத்து ரேஷன்  அட்டைதாரர்களுக்கும் ரூ. 750 வங்கி கணக்கில்…

6 hours ago

என்னோட கணவர் இவர்தான்!! முடிந்தது நடிகை சாக்ஷி அகர்வால் திருமணம்! குவியும் வாழ்த்து…

கோவா: நடிகை சாக்ஷி அகர்வால் தனது சிறுவயது நண்பரான நவனீத் மிஸ்ராவை காதலித்து திருமணம் செய்திருக்கிறார். அவர்களின் திருமணம் நேற்று…

7 hours ago

பெண் உயிரிழந்த விவகாரம்: நடிகர் அல்லு அர்ஜுனுக்கு ஜாமீன் வழங்கியது நீதிமன்றம்!

தெலுங்கானா: ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் கடந்த டிச,4-ம் தேதி அன்று ‘புஷ்பா 2’ படத்தின் சிறப்பு காட்சி திரையிடலை…

7 hours ago

ஜனவரி இறுதிக்குள் பொறுப்பாளர்கள் நியமனம்… மார்ச் முதல் விஜய் சுற்றுப்பயணம்.! தவெகவின் அடுத்தடுத்த நகர்வு…

சென்னை: தமிழக வெற்றிக் கழகம் கட்சி தொடங்கி ஒரு ஆண்டு நிறைவையெட்டி தமிழக முழுவதும் மக்கள் நலப்பணிகளை தீவிரப்படுத்தி தவெக…

8 hours ago