பொருளாதாரத்தில் முன்னேறிய வகுப்பினருக்கு 10% இடஒதுக்கீடு என்பதில் அரசின் நிலைப்பாடு என்ன? ஸ்டாலின் கேள்வி
தமிழக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் பேசினார்.அப்பொழுது அவர் கூறுகையில், நீட் தேர்வு தரவரிசைப்பட்டியல் திட்டமிட்டு தாமதம், இது மாணவர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தி உள்ளது நீட் தேர்வு.
சமூக நீதியின் தொட்டிலான தமிழகத்தில், 69% இடஒதுக்கீட்டை நீர்த்துப்போகச்செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது . மருத்துவ படிப்புகளில் 25% இடங்களை உயர்த்திக்கொள்ளலாம் என மத்திய அரசு வெளியிட்டுள்ள கவர்ச்சியை நம்பி தமிழக அரசு ஏமாந்து விடக்கூடாது.
பொருளாதாரத்தில் முன்னேறிய வகுப்பினருக்கு 10% இடஒதுக்கீடு என்பதில் அரசின் நிலைப்பாடு என்ன? என்று ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளர் இந்த விவகாரம் தொடர்பாக அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டி ஒரு முடிவெடுக்க வேண்டும் என்று பேசினார்.