தமிழகத்திற்கும் கர்நாடகாவிற்கும் இடையே நிலவும் காவிரி பிரச்சனைக்கு சரியான தீர்வு என்ன?

Default Image

தமிழகத்திற்கும் கர்நாடகாவிற்கும் இடையே காவிரி நீர் பிரிப்பினை குறித்து பல நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக பிரச்சனை நிலவி வருகிறது; இந்த பிரச்சனை குறித்த விரிவான அலசலை முந்தைய பதிப்பில் படித்து அறிந்தோம். இந்த பதிப்பில் தமிழகத்திற்கும் கர்நாடகாவிற்கும் இடையே நிலவும் காவிரி பிரச்சனைக்கு சரியான தீர்வு என்ன என்பது பற்றி படித்து அறியலாம்.

காவிரி மேலாண்மை வாரியம்

2017 ஆம் ஆண்டு ஜெயலலிதா உச்ச நீதிமன்றத்தை கேட்டுக்கொண்டபடி, காவிரி மேலாண்மை வாரியம் என்ற அமைப்பு அமைக்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, ஆய்வு முடிவு கடந்த ஆண்டு – 2018, பிப்ரவரி 16 ஆம் தேதி வெளியிடப்பட்டது.

அம்முடிவின் படி, தமிழகத்திற்கு முன்பு அளிக்கப்பட்ட நீர் அளவில் இருந்து 14.75 tmc ft அளவு குறைக்கப்பட்டு, அது கர்நாடகாவிற்கு வழங்கப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்ற முடிவு

உச்ச நீதி மன்றத்தின் புதிய காவிரி நீர் பிரிப்பினை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கர்நாடகா – 284.75 tmc ft, 4.75 tmc ft – பெங்களூரு
தமிழ்நாடு – 404.25 tmc ft
கேரளா – 30 tmc ft
புதுச்சேரி – 7 tmc ft

இந்த முடிவை ஏற்றுக்கொண்ட மாநிலங்கள் இதை தற்சமயம் பின்பற்றி வருகின்றன. இருப்பினும் இது போன்ற பிரச்சனைகள் நேராமல் இருக்க நாம் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் நாம் அறிய வேண்டிய விஷயங்கள் பற்றி இப்பொழுது பார்க்கலாம்.

காவிரி பிரச்சனைக்கான தீர்வு

காவிரி பிரச்சனை இனிமேல் ஏற்படாமல் இருக்க அல்லது இது போன்ற தண்ணீர் குறித்த பிரச்சனை இனிமேல் ஏற்படாமல் இருக்க, முதலில் உச்சநீதிமன்றம் அறிவித்த தீர்ப்பை சரிவர பின்பற்றி வருதல் அவசியம்.

தொலைநோக்கு பார்வை கொண்ட தீர்வு

இது மட்டுமில்லாமல், காடுகள் மற்றும் மரங்களை அதிகம் வளர்த்து, அதிக மழை பெற வழிவகை செய்தல் வேண்டும்; பெறும் மழையை சரிவர சேமித்து விவசாயம் மற்றும் குடிநீர் பயன்பாடுகளுக்கு பயன்படுத்திக் கொள்ளல் வேண்டும்.

தண்ணீரை அதிகம் பயன்படுத்தும் மற்றும் மாசுபடுத்தும் தொழிற்சாலைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு, அவற்றிற்கான கட்டுப்பாடுகளை விதித்து தேவையற்ற தண்ணீர் வீணாக்கலை தடுத்து நிறுத்த வேண்டும்.

சேமித்த மற்றும் கிடைக்கும் நீரை வீணாக்காமல் சரிவர பயன்படுத்தி வர வேண்டும்; விவசாயத்திற்கு சொட்டுநீர் பாசன முறை மற்றும் குடிநீர் பயன்பாடுகளை, தண்ணீர் வீணடித்தல் இல்லாமல் அமைக்க வேண்டும்.

பயிரிடும் முறை மற்றும் விவசாய முறைகளில் கவனம் செலுத்தி, குறைவான தண்ணீர் தேவைப்படும் முறைகளை மேற்கொள்ள வேண்டும்; அதே சமயத்தில் மேற்கொள்ளும் விவசாய முறை பயன்தரும் வகையில் அமையுமாறு வழிவகை செய்ய வேண்டும்.

இந்த படிநிலைகளை சரியாக மேற்கொண்டால் 2030 வரையில் தண்ணீர் தட்டுப்பாடு இல்லாமல் மகிழ்ச்சியான முறையில் வாழ்ந்து, விவசாயம் செய்து வாழ முடியும் என்று கண்டறியப்பட்டுள்ளது; நம் தினசரி வாழ்வில் முடிந்த வரை தண்ணீரை வீணாக்காமல் வாழ முயற்சிப்போமாக!

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்