“ராமருக்கும் கிரிக்கெட்டுக்கும் என்ன சம்மந்தம்?”- சீமான் சரமாரி கேள்வி!

Seeman NTK

அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நேற்றைய தினம் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஒருநாள் உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியும், பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியும் மோதின. இதில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இப்போட்டியே நடுவே, பாகிஸ்தான் அணி வீரர் முகமது ரிஸ்வான் விக்கெட்டை இழந்து  பெவிலியன் திரும்பும் போது, சில ரசிகர்கள், ஜெய் ஸ்ரீ ராம் என கோஷமிட்டனர்.

இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் பரவி கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. இந்த சம்பவம் குறித்து அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கண்டங்களை தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் தற்போது, ராமருக்கும் கிரிக்கெட்டுக்கும் என்ன சம்மந்தம்? என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் கேள்வி எழுப்பி கண்டனம் தெரிவித்தார். சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், இதை சொல்வதற்கு வருத்தப்படுவதாக கூறி, நாம் வணங்கும் தெய்வங்கள், போற்று கடவுள்களை கழிவறைக்கு மட்டும் தான் இவர்கள் அழைத்துவரவில்லை.

ஜெய் ஸ்ரீ ராம் கோஷம் பாகிஸ்தான் வீரர்களை கேவலப்படுத்தவில்லை.! அண்ணாமலை பேட்டி.!

பண்டை காலங்களில் இருந்து கோயில் என்பது ஒரு புனிதமான வழிபாட்டு தளம் என கருதி வழிபட்டு வருகிறோம். கோயிலுக்கு சென்று வழிபட்டு வரும் நிலையில், எதற்கு கடவுளை வீதிக்கு தூக்கிட்டு வந்தீர்கள், எதற்கு சாலையில் வைத்து, தண்ணீரில் போடுகிறீர்கள் என  விநாயகர் சதுர்த்தி விழா குறித்து பேசினார். தற்போது புதிதாக கிரிக்கெட் மைதானம் கட்டி வரும் பாஜக அரசு, அதனை உடுக்கை வடிவிலும், விளக்கு கம்பங்களை சூலம் மாதிரியும் கட்டும்போதே ஜெய் ஸ்ரீ ராம் என கோஷம் போடுறீங்க.

இப்போது இங்கு ஜெய் ஸ்ரீ ராம் கோஷம் போட்டீங்க, நாளை இன்னொரு இஸ்லாமிய நாட்டில் போட்டி நடக்குது, அங்கு அவர்கள் கோஷம் போடுவார்கள், இதுபோன்று கிருஸ்துவ நாட்டில் நடக்குது அங்கு அவர்கள் கோஷம் போடுவார்கள், இதுபோன்ற செயல் கொடுமையானது என தெரிவித்த அவர், ராமருக்கும் கிரிக்கெட்டுக்கும் என்ன சம்மந்தம்? என கேள்வி எழுப்பினார். விளையாட்டை விளையாட்டாக பார்க்கவேண்டும். விளையாட்டில் இதெல்லாம் பகை என்று பார்த்தால், அதைவிட கொடுமையான செயல் இருக்காது.

பாகிஸ்தான் வீரருக்கு எதிராக ‘ஜெய் ஸ்ரீ ராம் ‘ முழக்கம்.! உதயநிதி ஸ்டாலின் கடும் கண்டனம்.!

இந்த நாடு பிரிட்டிஷ் அரசுக்கு அடிமைப்பட்டு இருக்கும்போது, நாட்டின் விடுதலைக்கு போராடியவர்கள் பாகிஸ்தான், பங்களாதேஷில் உள்ள இஸ்லாமியர்கள். போராடாதவர்கள் ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக தான். நாட்டு பற்றை பேசுவதற்கு அவர்களுக்கு எந்த தகுதியும் இல்லை. 400 ஆண்டுகளாக நாட்டை ஆண்டவர்கள் உங்களுக்கு நண்பர்களாக உள்ளனர். இந்த மண்ணுக்காக போராடிய பாகிஸ்தான், பங்களாதேஸ் பகையாக உள்ளனர்.

850 மீனவர்களை சுட்டுக்கொன்ற இலங்கை உங்களுக்கு நட்பு நாடாக உள்ளது. பாகிஸ்தானும், பங்களாதேசும் இந்த நாட்டின் விடுதலைக்காக போராடியவர்கள் பகை நாடாக இருக்கிறது.  ஐபிஎல் தொடரில் பிரிட்டிஷ் வீரர்கள் விளையாடுகிறார்கள். ஆனால், பாகிஸ்தான் வீரர்கள் விளையாடவில்லை. எப்படிப்பட்ட ஒரு அரசியல் முடிவு இருக்கிறது, கொள்கை இருக்கிறது என்று ஆவேசமாக பேசிய சீமான், முத்துன பைத்தியம் எதும் செய்யாது. ஆனா இந்த அரை பைத்தியம் தான் பல வேலைகளை பார்க்கும் எனவும் விமர்சித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்