பீலா ராஜேஷ் மாற்றத்திற்கு காரணம் என்ன ? அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்

நிர்வாக நடவடிக்கை காரணமாகவே சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் மாற்றப்பட்டார் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சுகாதாரத்துறை செயலாளராக இருந்த பீலா ராஜேஷ் வணிகவரித்துறைச் செயலாளராக மாற்றம் செய்யப்பட்டார்.இவருக்கு பதில் ராதாகிருஷ்ணன் சுகாதாரத்துறை செயலாளராக நியமனம் செய்யப்பட்டார்.ஆனால் பீலா ராஜேஷ் மாற்றம் குறித்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்து வந்தது.
இந்நிலையில் இது குறித்து மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், நிர்வாக நடவடிக்கை காரணமாகவே சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் மாற்றப்பட்டார் .சூழலை பொறுத்து உரிய நேரத்தில் டிஎன்பிஎஸ்சி தேர்வு தொடர்பான அறிவிப்பை முதல்வர் வெளியிடுவார்.கொரோனா விவகாரத்தில் யார் அரசியல் செய்தாலும் மக்களால் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்று தெரிவித்தார்.
லேட்டஸ்ட் செய்திகள்
ஏப்ரல் 16 ஐபிஎல் “சூப்பர் ஓவர்” நாளா? மீண்டும் மீண்டும் அதே நாளில் டெல்லிக்கு நடந்த சம்பவம்!
April 17, 2025
நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!
April 16, 2025