தமிழக அரசு வேல் யாத்திரைக்கு மறுப்பு தெரிவித்ததற்கான காரணம் என்ன?

Published by
லீனா

தமிழக அரசு வேல் யாத்திரைக்கு மறுப்பு தெரிவித்ததற்கான காரணம்.

திருத்தணி முதல் திருச்செந்தூர் வரை நவம்பர்-6ம் தேதி முதல் டிசம்பர் 6-ம் தேதி வரை பாஜக சார்பில் வேல் யாத்திரை நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து, சென்னையை சேர்ந்த பத்திரிக்கையாளர்களான, பாலமுருகன் மற்றும் செந்தில் குமார் ஆகியோர் இந்த யாத்திரைக்கு தடை விதிக்க கோரி தனித்தனியாக வழக்கு தொடர்ந்திருந்தனர்.

அவர்கள் அளித்துள்ள மனுவில், கொரோனா தொற்று பரவலை தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், விநாயகர் சதுர்த்தி, மொகரம் போன்ற பண்டிகைகள் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், ஒரு மாத காலமளவும், வேல் யாத்திரை நடத்தப்படும் பட்சத்தில், 3,000 – 5,000 பேர் கூட இருப்பதால், கொரோனா தொற்று பரவும் அபாயம் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

இந்து பெண்கள் குறித்து திருமாவளவன் பேசிய கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, பாஜகவினர் முன்னெடுத்த போராட்டங்களில் சட்ட ஒழுங்கு போராட்டக்களை சுட்டி காட்டி, அதுபோன்ற சட்ட ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்பட்ட வாய்ப்பிருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

இந்த யாத்திரைக்கு அனுமதி வாழங்கப்பட்டால், கொரோனா தொற்று பரவலை தடுக்க தமிழக அரசு, மருத்துவர்கள் மற்றும் பல துறை ஊழியர்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளும் வீணாகும் என்றும், யாத்திரை முடியும் நாளான டிச.6ம் தேதி, பாபர் மசூதி இடிக்கப்பட்ட தினம் என்பதால், இதன் காரணமாகவும் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளதாக அந்த மனுவில் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், நீதிபதிகள் சத்திய நாராயணன் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வில், இந்த மனுக்களை அவசர வழக்காக விசாரிக்க கோரி முறையிடப்பட்ட நிலையில், இதனை ஏற்று செந்தில் குமாரின் மனுவை இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக தெரிவித்திருந்தனர்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், கொரோனா 2, 3-வது அலைக்கான அச்சுறுத்தல் உள்ளதால், பராஜகவின் வேல் யாத்திரைக்கு அனுமதி தர முடியாது என உயர்நீதிமன்றத்தில்  தமிழக அரசு தெரிவித்துள்ளது. மேலும், இந்த யாத்திரையால், மத கலவரங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதால், தமிழக அரசு அனுமதி மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Published by
லீனா

Recent Posts

நிறைவடைந்த முதல் நாள் மெகா ஏலம்! தற்போதைய அணி விவரம் இதோ…!

நிறைவடைந்த முதல் நாள் மெகா ஏலம்! தற்போதைய அணி விவரம் இதோ…!

ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் முதல் நாள் தற்போது நிறைவடைந்துள்ளது. பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கிய…

7 hours ago

‘நாயகன் மீண்டும் வரார்’….அஸ்வினை ரூ.9.75 கோடிக்கு தட்டித் தூக்கிய சிஎஸ்கே!

ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான முதல் நாள் மெகா ஏலம் சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று…

10 hours ago

சாஹலை ரூ.18 கோடிக்கு எடுத்த பஞ்சாப்! ஆசை வைத்து வேதனையடைந்த சென்னை!

ஜெட்டா : ஐபிஎல் 2025-ஆண்டு நடைபெறவுள்ள கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே இன்று சவூதி அரேபியாவில்…

12 hours ago

அனல் பறந்த பிட்டிங்..! கே.எல்.ராகுலை 14 கோடிக்கு எடுத்த டெல்லி அணி!

ஜெட்டா : ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அதில் அனைவரின் கண்ணும் முக்கிய வீரர்களின்…

12 hours ago

“இவரை நாங்க வச்சுகிறோம்”…10 கோடிக்கு ஷமியை தூக்கிய ஹைதராபாத்!

ஜெட்டா : அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் ஐபிஎல் போட்டிகளுக்கான மெகா ஏலமானது இன்று சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில்…

13 hours ago

10 நிமிடத்த்தில் வரலாற்றை மாற்றினார் ‘ரிஷப் பண்ட்’! ரூ.27 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது லக்னோ!

ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் தற்போது சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில், முக்கிய…

13 hours ago