தமிழக அரசு வேல் யாத்திரைக்கு மறுப்பு தெரிவித்ததற்கான காரணம் என்ன?
தமிழக அரசு வேல் யாத்திரைக்கு மறுப்பு தெரிவித்ததற்கான காரணம்.
திருத்தணி முதல் திருச்செந்தூர் வரை நவம்பர்-6ம் தேதி முதல் டிசம்பர் 6-ம் தேதி வரை பாஜக சார்பில் வேல் யாத்திரை நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து, சென்னையை சேர்ந்த பத்திரிக்கையாளர்களான, பாலமுருகன் மற்றும் செந்தில் குமார் ஆகியோர் இந்த யாத்திரைக்கு தடை விதிக்க கோரி தனித்தனியாக வழக்கு தொடர்ந்திருந்தனர்.
அவர்கள் அளித்துள்ள மனுவில், கொரோனா தொற்று பரவலை தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், விநாயகர் சதுர்த்தி, மொகரம் போன்ற பண்டிகைகள் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், ஒரு மாத காலமளவும், வேல் யாத்திரை நடத்தப்படும் பட்சத்தில், 3,000 – 5,000 பேர் கூட இருப்பதால், கொரோனா தொற்று பரவும் அபாயம் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
இந்து பெண்கள் குறித்து திருமாவளவன் பேசிய கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, பாஜகவினர் முன்னெடுத்த போராட்டங்களில் சட்ட ஒழுங்கு போராட்டக்களை சுட்டி காட்டி, அதுபோன்ற சட்ட ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்பட்ட வாய்ப்பிருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
இந்த யாத்திரைக்கு அனுமதி வாழங்கப்பட்டால், கொரோனா தொற்று பரவலை தடுக்க தமிழக அரசு, மருத்துவர்கள் மற்றும் பல துறை ஊழியர்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளும் வீணாகும் என்றும், யாத்திரை முடியும் நாளான டிச.6ம் தேதி, பாபர் மசூதி இடிக்கப்பட்ட தினம் என்பதால், இதன் காரணமாகவும் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளதாக அந்த மனுவில் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், நீதிபதிகள் சத்திய நாராயணன் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வில், இந்த மனுக்களை அவசர வழக்காக விசாரிக்க கோரி முறையிடப்பட்ட நிலையில், இதனை ஏற்று செந்தில் குமாரின் மனுவை இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக தெரிவித்திருந்தனர்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், கொரோனா 2, 3-வது அலைக்கான அச்சுறுத்தல் உள்ளதால், பராஜகவின் வேல் யாத்திரைக்கு அனுமதி தர முடியாது என உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. மேலும், இந்த யாத்திரையால், மத கலவரங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதால், தமிழக அரசு அனுமதி மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.