தேர்தல் நேரத்தில் கிரண் பேடியை பதவி நீக்கம் செய்ய என்ன காரணம்?- கேஎஸ் அழகிரி
புதுச்சேரி அரசை சிதைக்கவே தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனை அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர் என்று கேஎஸ் அழகிரி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மதுரையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கேஎஸ் அழகிரி, புதுச்சேரி அரசை சிதைக்கவே தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தராஜனை அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். நாராயணசாமியை செயல்படவிடாமல் தடுக்க கிரண் பேடியை அனுப்பியது போல் தற்போது தமிழிசை அனுப்பட்டுள்ளார். மேலும் தேர்தல் நேரத்தில் கிரண் பேடியை பதவி நீக்கம் செய்ய என்ன காரணம்? என்று கேள்வியும் எழுப்பியுள்ளார்.
இதனிடையே, புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநராக பதவி வகித்து வந்த கிரண்பேடி துணைநிலை ஆளுநர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டதை அடுத்து, தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு புதுச்சேரி மாநில துணை நிலை ஆளுநர் ஆக நியமனம் செய்யப்பட்டு, கூடுதல் வழங்கி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டார் என்பது குறிப்பிடப்படுகிறது. தமிழிசை சௌந்தரராஜன் புதுச்சேரி ஆளுநராக பொறுப்பேற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.