சசிகலாவிற்கு வாழ்த்து தெரிவித்ததற்கான காரணம் என்ன ? அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மகன் விளக்கம்

Default Image

சசிகலாவிற்கு வாழ்த்து தெரிவித்ததற்கான காரணத்தை ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ஜெயபிரதீப் கூறியுள்ளார்.

சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் பெங்களூரு – பரப்பன அக்ரஹாராத்தில் உள்ள மத்திய சிறையில் தண்டனை பெற்று வந்த சசிகலா கடந்த 27-ஆம் தேதி விடுதலை செய்யப்பட்டார். சசிகலா விடுதலையை தொடர்ந்து அதிமுகவை சார்ந்த சிலரும் போஸ்டர் ஒட்டி வரவேற்று வருகின்றனர்.

சசிகலாவை வரவேற்று அதிமுக நிர்வாகிகள் போஸ்டர் அல்லது பேனர் வைத்தால் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டு வருகின்றனர்.அந்த வகையில் தான் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ஜெயபிரதீப் அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.அந்த அறிக்கையில்,பெங்களூருவில் கொரோனா நோயினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் மதிப்பிற்குரிய அம்மையார் திருமதி. சசிகலா நடராஜன் அவர்கள் பூரண குணமடைந்து இனி வரும் காலங்களில் நல்ல உடல் நலம் பெற்று அறம் சார்ந்த பணிகளில் கவனம் செலுத்தி மன நிம்மதியுடன் மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ வேண்டும் என்றும் எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.

இது அரசியல் சார்ந்த பதிவு அல்ல என் மனதில் தோன்றிய மனிதாபிமானம் சார்ந்த பதிவு என தனது அறிக்கையில் தெரிவித்தார்.இதனால் அதிமுகவில் சற்று சலசலப்பு நிலவியது.இந்நிலையில் இது குறித்து மீண்டும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ஜெயபிரதீப் கூறுகையில் , “மனிதாபிமான அடிப்படையில் தான் சசிகலாவிற்கு வாழ்த்து தெரிவித்ததாக விளக்கம் அளித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்