வெளிநாடு பயணத்தின் உண்மையான காரணம் என்ன ? முதலமைச்சருக்கு ஸ்டாலின் கேள்வி

Published by
Venu

முதலமைச்சர் பழனிசாமி மேற்கொண்டுள்ள வெளிநாடு பயணத்தின் உண்மையான காரணங்களை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி  வெளிநாடு பயணம் : 

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி  தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் துபாய் ஆகிய மூன்று  நாடுகளுக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ளார்.

 முதலமைச்சர் பயணம் குறித்து ஸ்டாலின் கருத்து: 

சேலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில்  முதலமைச்சர் பழனிசாமியின் வெளிநாட்டு பயணம் குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசினார்.அப்பொழுது அவர் பேசுகையில், முதலமைச்சர் பழனிசாமி வெளிநாடு போகிறார். பயணம் வெற்றி பெற வாழ்த்துகள். எதற்காக இந்தப் பயணம்? முதலீட்டோடு வந்தால் பாராட்டுகிறோம் என்று தெரிவித்தார்.

ஸ்டாலின் வெளிநாடு செல்லும் மர்மம் என்ன? முதலமைச்சர் கேள்வி :

இதனையடுத்து இன்று தமிழக முதலமைச்சர் வெளிநாடு செல்வதற்கு முன்னர் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,ஸ்டாலின் வெளிநாடு செல்லும் மர்மம் என்ன ? என்று கேள்வி எழுப்பினார். சொந்த காரணங்களுக்காக  வெளிநாடு செல்லும் ஸ்டாலின் என்னுடைய பயணத்தை கொச்சைப்படுத்துகிறார் என்றும் தெரிவித்தார்

மு.க.ஸ்டாலின் பதில் அறிக்கை: 

இந்த நிலையில் முதலமைச்சரின் வெளிநாடு பயணம் குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.அந்த அறிக்கையில், முதலமைச்சர் பழனிசாமி மேற்கொண்டுள்ள வெளிநாடு பயணத்தின் உண்மையான காரணங்களை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் .நான் வெளிப்படையாக மேற்கொள்ளும் வெளிநாடு பயணத்திற்கு உள்நோக்கம் கற்பிக்கும் முதல்வர், தனது பயணம் பற்றி விளக்கவேண்டும்.

இரு உலக முதலீட்டாளர்கள் மாநாடுகளை நடத்தி முதலீடுகளைப் பெற முடியாத ஒரு முதலமைச்சர், வெளிநாடு சுற்றுப்பயணம் போவது ‘கூரை ஏறிக் கோழி பிடிக்க முடியாதவர், எப்படி வானம் ஏறி வைகுந்தம் காட்டுவார்’ என்ற கேள்வி எழுந்திருக்கிறது என்று தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Published by
Venu

Recent Posts

மகளிர் டி20 உலக கோப்பை: ஆட்ட நாயகி.. தொடர் நாயகி வென்ற இந்தியாவின் த்ரிஷா கொங்காடி.!

மகளிர் டி20 உலக கோப்பை: ஆட்ட நாயகி.. தொடர் நாயகி வென்ற இந்தியாவின் த்ரிஷா கொங்காடி.!

மலேசியா : பிசிசிஐ 19 வயதுக்குட்பட்டோருக்கான மகளிர் டி20 உலகக் கோப்பையை இந்தியா வென்றுள்ளது. மலேசியாவின் கோலாலம்பூரில் உள்ள பியூமாஸ்…

11 hours ago

இயக்குனருடன் டேட்டிங் செய்யும் சமந்தா? அவரே வெளியிட்ட அந்த புகைப்படங்கள் வைரல்.!

சென்னை : நடிகை சமந்தா கடந்த சில நாட்களாக இயக்குனருடன் டேட்டிங் செய்து வருகிறார் என்று கிசுகிசுக்கப்பட்டு வந்தது. இப்போது…

12 hours ago

யு19 மகளிர் டி20 உலகக் கோப்பை: 2வது முறை சாம்பியன் பட்டம் வென்றது இந்தியா.!

மலேசியா : மலேசியாவில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்காவை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது.…

13 hours ago

மகளிர் டி20 உலக கோப்பை இறுதிப்போட்டி… தென்னாப்பிரிக்காவை 82 ரன்களில் சுருட்டிய இந்தியா.!

மலேசியா : ஐசிசி 19 வயதுக்குட்பட்ட மகளிர் டி20 உலகக் கோப்பை இறுதி போட்டியில் இந்திய அணியின் அபாரமான பந்து…

15 hours ago

கடைசி டி20 போட்டி: இந்தியா – இங்கிலாந்து இன்று மோதல்.!

மும்பை : இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5வது (கடைசி) டி20 போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று…

15 hours ago

“ஈரோடு இடைத்தேர்தல் நல்லாட்சிக்கு மக்கள் தரும் மதிப்பெண்கள்” – முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

சென்னை : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி புதன்கிழமை அன்று ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.…

16 hours ago