வெளிநாடு பயணத்தின் உண்மையான காரணம் என்ன ? முதலமைச்சருக்கு ஸ்டாலின் கேள்வி
முதலமைச்சர் பழனிசாமி மேற்கொண்டுள்ள வெளிநாடு பயணத்தின் உண்மையான காரணங்களை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளிநாடு பயணம் :
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் துபாய் ஆகிய மூன்று நாடுகளுக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ளார்.
முதலமைச்சர் பயணம் குறித்து ஸ்டாலின் கருத்து:
சேலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் பழனிசாமியின் வெளிநாட்டு பயணம் குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசினார்.அப்பொழுது அவர் பேசுகையில், முதலமைச்சர் பழனிசாமி வெளிநாடு போகிறார். பயணம் வெற்றி பெற வாழ்த்துகள். எதற்காக இந்தப் பயணம்? முதலீட்டோடு வந்தால் பாராட்டுகிறோம் என்று தெரிவித்தார்.
ஸ்டாலின் வெளிநாடு செல்லும் மர்மம் என்ன? முதலமைச்சர் கேள்வி :
இதனையடுத்து இன்று தமிழக முதலமைச்சர் வெளிநாடு செல்வதற்கு முன்னர் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,ஸ்டாலின் வெளிநாடு செல்லும் மர்மம் என்ன ? என்று கேள்வி எழுப்பினார். சொந்த காரணங்களுக்காக வெளிநாடு செல்லும் ஸ்டாலின் என்னுடைய பயணத்தை கொச்சைப்படுத்துகிறார் என்றும் தெரிவித்தார்
மு.க.ஸ்டாலின் பதில் அறிக்கை:
முதல் இரு உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் போடப்பட்ட 402 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் வரப் போவதாகச் சொன்ன 5.42 லட்சம் கோடி முதலீடுகள் வந்ததா?#TNGIM2019-க்கு முன்பு அமைச்சர்கள் வெளிநாடு சென்றபோது, செல்லாத @CMOTamilNadu, மாநாடு முடிந்து 7 மாதங்கள் கழித்து வெளிநாடு போவது ஏன்? pic.twitter.com/cCQ5JRO5MS
— M.K.Stalin (@mkstalin) August 28, 2019
இந்த நிலையில் முதலமைச்சரின் வெளிநாடு பயணம் குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.அந்த அறிக்கையில், முதலமைச்சர் பழனிசாமி மேற்கொண்டுள்ள வெளிநாடு பயணத்தின் உண்மையான காரணங்களை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் .நான் வெளிப்படையாக மேற்கொள்ளும் வெளிநாடு பயணத்திற்கு உள்நோக்கம் கற்பிக்கும் முதல்வர், தனது பயணம் பற்றி விளக்கவேண்டும்.
இரு உலக முதலீட்டாளர்கள் மாநாடுகளை நடத்தி முதலீடுகளைப் பெற முடியாத ஒரு முதலமைச்சர், வெளிநாடு சுற்றுப்பயணம் போவது ‘கூரை ஏறிக் கோழி பிடிக்க முடியாதவர், எப்படி வானம் ஏறி வைகுந்தம் காட்டுவார்’ என்ற கேள்வி எழுந்திருக்கிறது என்று தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.