கொரோனா நிவாரண நிதியை தெரியப்படுத்துவதில் சிக்கல் என்ன ? என்று தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்த நிலையில் தற்போது தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது.கொரோனா பாதிப்பை அதிகம் இருக்கும் பகுதிகளில் மட்டும் முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது.இந்த சமயத்தில் கொரோனா தடுப்பிற்கு தமிழக அரசு சார்பில் முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு விருப்பமுள்ளோர் நிதி அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. அதன்படி பல தரப்பினரும் நிதி வழங்கினர்.
இதற்குடையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் கற்பகம் என்பவர் வழக்கு ஒன்றை தொடர்ந்தார்.அவரது வழக்கில் ,
கொரோனா தடுப்பிற்கு நன்கொடையாக எவ்வளவு தொகை பெறப்பட்டது என்ற விவரம் அரசின் இணையத்தில் இல்லை என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கு நேற்று உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது , அப்பொழுது வழக்கை தொடர்ந்தவர் தரப்பில்,பிற மாநிலங்களில் உள்ள அரசு இணையதளங்களில் கொரோனாவிற்காக பெறப்பட்ட தொகை குறித்த தகவல்கள் இருக்கின்றது.ஆனால் தமிழக இணைய தளத்தில் எந்த தகவலும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டது. கொரோனாதொடர்பான தகவல்களை இணையத்தில் வெளியிட அரசுக்கு என்ன சிரமம் உள்ளது என்று கேள்வி எழுப்பி ,அரசு உரிய பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை இன்று ஒத்தி வைத்தது நீதிமன்றம்.
சென்னை : குமரிக்கடல் மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இன்று முதல்…
திருவாரூர் : வருகின்ற நவம்பர் 30-ஆம் தேதி தமிழ்நாடு வருகிறார் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு. திருவாரூரில் உள்ள தமிழ்நாடு…
சென்னை : பிரபல லாட்டரி தொழிலதிபர் மார்ட்டின் தொடர்புடைய பல்வேறு இடங்களில் கடந்த நவம்பர் 14ஆம் தேதி முதல் அமலாக்கத்துறையினர் …
சென்னை : நயன்தார விக்னேஷ் சிவன் இருவரின் திருமண வீடியோ நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வரும் நவம்பர் 20-ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
திருநெல்வேலி : நெல்லை மேலப்பாளையத்தில் பிரதான சாலையில், அமரன் திரைப்படம் வெளியாகியுள்ள அலங்கார் திரையரங்கின் மீது, மர்ம நபர்கள் பெட்ரோல்…
சென்னை -சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான எபிசோடில்[நவம்பர் 16]மீனாவின் புதிய பிசினஸ் ஐடியா.. சப்போர்ட் செய்யும் ஸ்ருதி.. மீனாவின் புதிய…