புதுச்சேரியின் நிலைப்பாடு என்ன ? இன்று ஆலோசனை
புதுச்சேரியில் இன்று ஊரடங்கின் நிலைப்பாடு என்ன என்பது குறித்து ஆலோசனை நடைபெறவுள்ளது.
கொரோனா வைரஸ் காரணமாக முதலில் ஏப்ரல் 14 -ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதன் பின்னர் ஊரடங்கு மே 3-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.இன்னும் 2 நாட்களில் ஊரடங்கு முடிவடையுள்ளது.
இந்நிலையில் புதுச்சேரியில் இன்று ஊரடங்கின் நிலைப்பாடு என்ன என்பது குறித்து ஆலோசனை நடைபெறவுள்ளதாக அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தெரிவித்துள்ளார்.மேலும் இன்று முதல்வர் நாராயணசாமி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. இந்த ஆலோசனை கூட்டத்தில் புதுச்சேரியில் வரும் மே 3-க்குப் பிறகு எவ்வித நிலைப்பாடு எடுப்பது என்பது குறித்து முடிவு எடுக்கப்படும்.100 % ஊரடங்கு விலக்கு இருக்காது. சில கட்டுப்பாடுகள் இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.