பாஜகவிற்கு ரஜினி ஆதரவு அளித்தால் நிலைப்பாடு என்ன ? எல்.முருகன் விளக்கம்

Published by
Venu

தேசியம் மற்றும் ஆன்மிகம் மீது அதிகப் பற்று கொண்டவர் ரஜினிகாந்த் என்று எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

கடந்த டிசம்பர் 3-ஆம் தேதி அன்று நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில், ஜனவரியில் கட்சித் துவக்கம் என்றும் டிசம்பர் 31-ஆம் தேதி அறிவிப்பு வெளியாகும் என்றும் பதிவிட்டார்.ஜனவரியில் கட்சி துவங்க இருப்பதால், டாக்டர் ரா.அர்ஜுனமூர்த்தி அவர்கள் தலைமை ஒருங்கிணைப்பாளராகவும் மற்றும் திரு. தமிழருவி மணியன் அவர்கள் மேற்பார்வையாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர் என்றும் அறிவித்தார் ரஜினி.பின்னர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துமனையில் அனுமதிக்கப்பட்ட பின் ,டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.இறுதியாக கட்சி தொடங்கி அரசியலுக்கு வர முடியவில்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன் என ரஜினிகாந்த் அறிக்கை வெளியிட்டார். தேர்தல் அரசியலுக்கு வராமல் என்ன சேவை செய்ய முடியுமோ அதை செய்வேன் என்று தெரிவித்தார்.ரஜினியின் இந்த அறிவிப்பு  அவரது ஒரு சில ஆதரவாளர்களுக்கு பெரும் ஏமாற்றமாக அமைந்தது.

அரசியல் கட்சி தொடங்கவில்லை என்று ரஜினி அறிவித்த நிலையில், தங்களது கட்சிக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என தமிழக அரசியல் கட்சியினர் பலர் தெரிவித்து வருகின்றனர்.குறிப்பாக தங்களது கட்சிக்கு ரஜினி குரல் கொடுக்க வேண்டும் என்றும் தெரிவித்து வருகின்றனர்.

இதனிடையே தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் மதுரை விமான செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது கூறுகையில்,தேசியம் மற்றும் ஆன்மிகம் மீது அதிகப் பற்று கொண்டவர்  ரஜினிகாந்த்.பாஜகவும் தேசியம் மற்றும் ஆன்மிகத்தை இரு கண்களாக கொண்ட கட்சி.ஆகவே வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் ரஜினிகாந்த் பாஜகவிற்கு ஆதரவு அளித்தால் வரவேற்போம் என்று தெரிவித்துள்ளார்.

Published by
Venu

Recent Posts

டெஸ்ட் தொடரைக் கைப்பற்றிய ஆஸ்திரேலியா…WTC ஃபைனல் வாய்ப்பை இழந்த இந்தியா!

டெஸ்ட் தொடரைக் கைப்பற்றிய ஆஸ்திரேலியா…WTC ஃபைனல் வாய்ப்பை இழந்த இந்தியா!

சிட்னி :  பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரை ஆஸ்ரேலியா கைப்பற்றியுள்ளது இந்திய அணிக்கும் ரசிகர்களுக்கும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த…

10 minutes ago

சென்னை மக்களின் கவனத்திற்கு: தாம்பரம் – கடற்கரை இடையே நாளை மின்சார ரயில் ரத்து… 40 பேருந்துகள் இயக்கம்!

சென்னை: நாளை (டிச.05) தாம்பரம் ரயில் நிலையத்தில் பயணிகளுக்கான புதிய நடை மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெறுவதால், காலை 7…

13 hours ago

வீட்டில் நடந்த ரெய்டு: “வந்தாங்க.. ஒன்னுமில்லைன்னு போய்ட்டாங்”- அமைச்சர் துரைமுருகன்.!

சென்னை: அமலாக்கத்துறை சோதனையில் எந்த ஆவணமும் பறிமுதல் செய்யப்படவில்லை என அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார். வேலூர் மாவட்டம் காட்பாடியில் காந்திநகர்…

13 hours ago

வன்கொடுமை விவகாரம்: ‘ஆதாரமற்ற செய்திகளை யாரும் பகிர வேண்டாம்’ – காவல்துறை அறிக்கை.!

சென்னை: அண்ணா பல்கலை. மாணவி விவகாரத்தில் இப்போது தீவிரமாக விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில், சிறப்பு புலனாய்வுக் குழு அதிகாரிகள்…

14 hours ago

மீண்டும் மீண்டுமா? இழுத்தடிக்கும் ரிலீஸ்… பிசாசு-2 படத்தை வெளியிட தடை நீடிப்பு.!

சென்னை: இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் உருவாகியுள்ள பிசாசு 2 திரைப்படம் எப்போது தான் வெளியாகும் என 2 ஆண்டுகளுக்கு மேல்…

14 hours ago

பட்டாசு ஆலை வெடி விபத்து: 2 பேர் கைது… போலீஸார் தீவிர விசாரணை.!

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் கோட்டையூர் கிராமத்தில் செயல்பட்டுவந்த தனியார் பட்டாசு ஆலையில் இன்று காலையில் மருந்து கலக்கும் அறையில் எதிர்பாராதவிதமாக…

15 hours ago