ஆளுநர் அனுமதி மறுக்கும் மர்மம் என்ன? பின்னணியில் பாஜக மாநில தலைவரா? ஜோதிமணி எம்.பி கேள்வி!

jothimani

அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கரின் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்க ஆளுநர் அனுமதி மறுக்கும் மர்மம் என்ன? என்றும் இதன் பின்னணியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளாரா? எனவும் காங்கிரஸ் எம்பி ஜோதிமணி கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக ஜோதிமணி எம்பி கூறியதாவது, அதிமுகவில் முன்னாள் அமைச்சர்கள் டாக்டர் விஜயபாஸ்கர், பிவி ரமணா, எம்ஆர் விஜயபாஸ்கர் மற்றும் வீரமணி ஆகிய 4 பேர் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்க அனுமதி கேட்டு தமிழ்நாடு அரசு, ஆளுநர் ஆர்என் ரவிக்கு கோப்புகளை அனுப்பியது.

ஆனால், தமிழக அரசு அனுப்பிய மசோதாக்களில் ஆளுநர் கையெழுத்து இடவில்லை. இதில் குறிப்பாக கரூரை சேர்ந்த முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர் சம்பந்தமான கோப்பில், ஆளுநர் இன்றைக்கு வரைக்கும் கையெழுத்து இடவில்லை. இதன் மர்மம் என்ன? என்று கேட்க வேண்டியுள்ளது. ஆளுநர் மாளிகையில் இருந்து 6-7-2023 அன்று ஒரு செய்துகுறிப்பு வெளியிட்டுள்ளார்கள்.

மருத்துவமனையில் சிகிச்சை… அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 11வது முறையாக நீட்டிப்பு!

அதில், முன்னாள் அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர் தொடர்பாக கடிதம் எதும் வரவில்லை என குறிப்பிட்டுள்ளனர். இதன்பிறகு சட்டப்பேரவையில் இயற்றிய 10க்கும் மேற்பட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை என தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அப்போது, ஆளுநர் மாளிகை சார்பில் உச்சநீமன்றத்தில் பிராமண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.

அதில், 15-5-2023 அன்று அதிமுக முன்னாள் அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்க அனுமதி கேட்டு தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசிடம் இருந்து கடிதமே வரவில்லை என கூறிய ஆளுநர் மாளிகை, தற்போது உச்சநீதிமன்றத்தில் அந்த கடிதம் 5வது மாதமே வந்தது என கூறியுள்ளார் ஆளுநர்.

இதில் என்ன மர்மம் இருக்கு, ஆளுநர் எதற்கு இதுபோன்று நடக்க வேண்டும் என கேள்வி கேட்க வேண்டியுள்ளது. அதுமட்டுமில்லாமல், ஆளுநர் மாளிகை சார்பாக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பிராமண பத்திரத்தில், முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சரும், விராலிமலை எம்எல்யுமான டாக்டர் விஜயபாஸ்கர், ரமணா மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்க அனுமதி கொடுத்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடிக்கு எப்பொழுதும் என் ஞாபகம் தான் – அமைச்சர் உதயநிதி

ஆனால், இன்று வரை கரூரை சேர்ந்த முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர் மீதான ஊழல் குற்றசாட்டுகளை விசாரிக்க ஆளுநர் அனுமதி அளிக்காமல் உள்ளார். இதற்கான மர்மம் என்ன? இதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பது குறித்து கேட்க வேண்டியுள்ளது. இதில் இருந்து பார்க்கும்போது ஆளுநர் அப்பட்டமாக பொய் சொல்கிறார் என்பது தெரிகிறது.

மசோதாக்கள் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடந்து வரும் நிலையில், மாற்ற அதிமுக முன்னாள் அமைச்சர்களை விசாரிக்க அனுமதி அளிக்கும் ஆளுநர், எம்ஆர் விஜயபாஸ்கர் மீதான குற்றச்சாட்டை விசாரிக்க அனுமதி மறுப்பது ஏன்? என கேள்வி எழுப்பியுள்ளார். எம்ஆர் விஜயபாஸ்கர் அமைச்சராக இருந்தபோது பல்லாயிரம் கோடி மதிப்புள்ள சொத்துக்களை வாங்கி குவித்துள்ளனர்.

வெளிப்படையாகவே இவ்வளவு சொத்துக்களை விஜயபாஸ்கர் வாங்கி குவித்துள்ளார் என பொதுவெளியில் தகவல் இருக்கும்போது, ஆளுநர் எதற்காக அவர் மீதான ஊழல் தொடர்பான விசாரணைக்கு அனுமதி மறுக்கிறார் என்றும் இதற்கு பின்னணியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இருக்கிறாரா? என்ற கேள்வியை கேட்காமல் இருக்க முடியவில்லை என ஜோதிமணி எம்பி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்