புரெவி புயலின் தற்போதைய நிலவரம் என்ன ? வானிலை ஆய்வு மையம் விளக்கம்
மன்னார் வளைகுடா பகுதியில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தொடர்ந்து அதே பகுதியில் நிலவுகிறது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புரெவி புயல் காரணமாக தமிழகத்தில் பல இடங்களில் மழை பெய்து வருகிறது.இதனிடையே தென் மண்டல வானிலை ஆய்வு மையத் தலைவர் பாலச்சந்திரன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், மன்னார் வளைகுடா கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தொடர்ந்து அதே இடத்தில் நிலை கொண்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.இன்று மாலை வரை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அதே பகுதியில் நிலவும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இது இன்று மாலை வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி நகரக் கூடும் என்று தெரிவித்துள்ளார்.ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் 11 இடங்களில் அதீத கனமழை பெய்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.ராமநாதபுரம் வழியே நாளை மாலை தெற்கு கடலோர பகுதியில் புரெவி புயல் நகரக் கூடும் என்று தெரிவித்துள்ளார்.