விவசாயத் தொழிலாளர் அணிகள் வெளியிட்டுள்ள பட்டியலுக்கு முதல்வர் என்ன பதில் வைத்திருக்கிறார்? – மு.க.ஸ்டாலின்

Default Image

மத்திய அரசின் சட்டங்களைப் பற்றி ஆராய்ந்து கருத்துகளைச் சொல்ல விவசாயியாக இருக்க வேண்டுமென்ற அவசியம் இல்லை என்று முக ஸ்டாலின் பதில்.

பாஜக அரசின் வேளாண் சட்டங்களால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் என திமுக விவசாய அணி மற்றும் விவசாயத் தொழிலாளர் அணிகள் வெளியிட்டுள்ள பட்டியலுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி என்ன பதில் வைத்திருக்கிறார்? என்று முக ஸ்டாலின் அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், குடிமராமத்துத் திட்டத்தில் ஊழல் என்றும் விவசாயிகளுக்கும் தண்ணீர் வழங்கும் கால்வாய்கள் தூர்வாரும் பணிகளில் ஊழல் எனவும் கூறியுள்ளார்.

மத்திய அரசின் பிரதமர் கிசான் திட்டத்தில் கூட லட்சக்கணக்கான போலிகளைச் சேர்த்து நிதியைச் சுரண்டிய அ.தி.மு.க. ஆட்சியின் முதலமைச்சர் பழனிசாமிக்கு விவசாயி என்று சொல்லிக்கொள்ள எந்தவிதத் தார்மீக உரிமையும் கிடையாது. ஒரு விவசாயி என்பவர், விவசாயிகளின் திட்டத்திலேயே ஊழல் செய்ய மாட்டார். எந்த மனிதரும் தனது சொந்த வீட்டிலேயே கன்னக்கோல் போட மாட்டார். விவசாயிகளுக்கு முழுக்க முழுக்க எதிரான வேளாண் சட்டங்களை ஆதரிக்க மாட்டார்.

இதையடுத்து, விவசாயிகள் தங்களின் விளைபொருட்களுக்கு அதிக விலை கேட்டுப் போராடினாலும், குறைந்தபட்ச ஆதார விலையையாவது கொடுங்கள் என்பதுதான் அவர்களின் தவிப்பாக இருக்கிறது. அந்த குறைந்தபட்ச ஆதார விலை (MSP) என்ற வார்த்தையே இல்லாத வேளாண் சட்டங்களை இரு அவைகளிலும் ஆதரித்து வாக்களித்து விட்டு, அந்த வேளாண் விரோத சட்டங்களுக்கு ஆதரவாக முதலமைச்சர் பேசியும் வருகிறார் என்றால், அவர் உண்மையிலேயே விவசாயியா? இல்லை ஊரை ஏமாற்றப் போட எத்தனிக்கும் உத்தமர் வேடமா? என்று தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் சட்டங்களைப் பற்றி ஆராய்ந்து கருத்துகளைச் சொல்ல விவசாயியாக இருக்க வேண்டுமென்ற அவசியம் இல்லை. வேளாண்மை பற்றிய அடிப்படை அறிவும், விவசாயிகள் நலனில் அன்பும் அக்கறையும் இருந்தாலே போதுமானது. இவருக்கு அந்த அடிப்படை இயல்புகள் இல்லை அல்லது குறைவு என்றால், அதற்கு நான் என்ன செய்ய முடியும்? என்று கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்