கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளில் தகரம் அடிக்கப்படுவதற்கான காரணம் என்ன? – உயர்நீதிமன்றம்
தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மீது தனி கவனம் செலுத்தி கவனித்து வருகிறது.
இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில், கொரோனா அறிகுறி இல்லதாவர்களை சிகிச்சை மையத்திற்கு அழைத்துச் செல்லக்கூடாது என வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹேமலதா அமர்வுக்கு முன் இன்று விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளில் தகரம் அடிக்கப்படுவதற்கான காரணம் என்ன? எந்த விதிமுறைகளின் அடிப்படையில் வீடுகளில் தகரம் அடிக்கப்படுகிறது? என கேள்வி எழுப்பியுள்ளனர்.
மேலும், இதுகுறித்து சென்னை மாநகராட்சி மற்றும் தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பிய உயர்நீதிமன்ற நீதிபதிகள், அக்டோபர் 19-ம் தேதி தமிழக அரசு மற்றும் சென்னை மாநகராட்சி பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.