தேசிய பேரிடர் மேலாண்மை குழுவின் அறிக்கை மீது தமிழக அரசு மேற்கொண்ட நடவடிக்கை என்ன? என்று எம்.பி.ரவிக்குமார் அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் கேள்வியெழுப்பியுள்ளார்.
வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக நிவர் எனும் புயல் தற்போது உருவாகியுள்ளது. இதன் காரணமாக கடலோர பகுதியில் உள்ள பல்வேறு மாவட்டங்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு தொடர்ந்து புயல் கூண்டுகள் ஏற்றப்பட்டு வருகிறது. இந்நிலையில் இது குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் எம்பி ரவிக்குமார் அவர்கள், தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் இனி வரக்கூடிய காலங்களில் புயல் வரும்பொழுது முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக அறிக்கை ஒன்றை பேரிடர் மேலாண்மை அமைப்பின் சார்பில் தமிழக அரசிடம் வழங்கப்பட்டது .
ஆனால் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள எதையுமே தமிழக அரசு இதுவரை செய்ததாக தெரியவில்லை. கஜா புயல் ஏற்படுத்திய பேரழிவுக்குப் பிறகு அதைப் பற்றி ஆய்வு செய்ய தேசிய பேரிடர் மேலாண்மை அமைப்பின் சார்பில் குழு ஒன்று அமைக்கப்பட்டு இருந்தது. தேசிய பேரிடர் மேலாண்மை அமைப்பு அளித்த அறிக்கை மீது தமிழக அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கை என்ன? எனவும் இனிமேலாவது தமிழக அரசு அந்த அறிக்கையை செயல்படுத்துமா எனவும் ரவிக்குமார் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இதோ அந்த பதிவு,
லக்னோ : ஐபிஎல்2025-65 வது போட்டி லக்னோவில் இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB) மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH)…
சென்னை : தவெக-விற்கு ஆலோசகராக செயல்பட்டு வந்த ஐஆர்எஸ் அதிகாரி அருண்ராஜ் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அதாவது, தமிழக…
லக்னோ : லக்னோவில் இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB) மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணிகளுக்கு இடையே நடைபெற்று…
அமெரிக்கா: கூகுள் நிறுவனம் Veo 3 என்ற பெயரில் Al தொழில்நுட்பத்தின் அடுத்த கட்ட வீடியோ கருவியை அறிமுகம் செய்து…
நீலகிரி : தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே துவங்குவதால், மே 25 மற்றும் 26-ம் தேதி கோவை, நீலகிரி ஆகிய 2…
லக்னோ : ஐபிஎல் 2025 லக்னோவில் இன்று இரவு 7.30 மணிக்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB) மற்றும் சன்ரைசர்ஸ்…