சட்ட ஒழுங்கு குறித்து பேச பழனிசாமிக்கு என்ன அடிப்படை இருக்கிறது – அமைகள் தங்கம் தென்னரசு

Default Image

ஆளுநரிடம் எடப்பாடி பழனிசாமி அளித்த புகார்கள் அனைத்தும் ஆதாரம் இல்லாதது என தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.  

அமைச்சர் தங்கம் தென்னரசு சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், ஆளுநரிடம் எடப்பாடி பழனிசாமி அளித்த புகார்கள் அனைத்தும் ஆதாரம் இல்லாதது; பொய்களின் தொகுப்பு துப்பாக்கிச்சூட்டில் 13 பேரை கொன்றவருக்கு சட்டம் – ஒழுங்கு பற்றி பேச தகுதி இல்லை.

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு, சாத்தான்குளம் கொலைகள், பொள்ளாச்சி சம்பவம் யார் ஆட்சியில் நடந்தது என்பதை மறந்துவிட்டாரா எடப்பாடி பழனிசாமி? எடப்பாடி பழனிசாமி புளுகுமூட்டைகளின் பின்னால் ஒளிந்து கொண்டிருக்கிறார். மழைவெள்ள பாதிப்பு, கோவை சம்பவங்களில் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டுகள் குவிகின்றன. இதனை தாங்கிக் கொள்ள முடியாமல் காந்தாரி போல ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து பேசியிருக்கிறார்.

அதிமுகவில் நடக்கும் உட்கட்சி பூசலில் பாஜகவின் ஆதரவு பெற அக்கட்சி தலைவர்களை சந்தித்துள்ளார். பாஜகவில் நடக்கும் உட்கட்சி பிரச்சனையை திசை திருப்ப ஒரு கருவியாக மாறி பழனிசாமி ஆளுநரை சந்தித்திருக்கிறார் .

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்